யாழ் வைத்தியசாலை முன்பாக புலிகளால் சுடப்பட்ட புளொட் உறுப்பினர் காயங்களுடன் உயிர்பிழைத்தார்

Read Time:0 Second

plote.jpgயாழ் போதனா வைத்தியசாலை முன்பாக� இன்று (08.07.2006) காலை 8.00 மணியளவில் புலிகளால் சுடப்பட்ட புளொட் உறுப்பினர் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். கோப்பாய் வடக்கை சேர்ந்த பிரேம் என அழைக்கப்படும் இராஜா பிரேம்குமார் என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தவராவார்.� இச்சம்பவத்தின் போது தேனீர் கடையின் உள்ளே நின்றிருந்த பொதுமகன் ஒருவரும் காயமடைந்துள்ளார். படுகொலை முயற்சியிலிருந்து காயங்களுடன் தப்பித்துள்ள பிரேம்குமார் ஒத்திவைக்கப்பட்டுள்ள உள்ளுராட்சிமன்ற தேர்தலில் புளொட் அமைப்பின் சார்பில்� வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.� �

அண்மையில் யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற பல படுகொலைகள் புலிகளாலேயே மேற்கொள்ளப்பட்டிருப்பதாக உள்ளுர்வாசிகள் தெரிவிக்கின்றனர். இலங்கை இராணுவம் தமிழர்களை கொல்வதாக புலிகளும், புலிசார்பு ஊடகங்களும், வெளிநாடுகளில் உள்ள புலிகளுக்கு சார்பானவர்களும் பாரிய பிரச்சாரத்தை மேற்கொள்ளும் அதே வேளை இங்கு புலிகள் படுகொலைகளை புரிந்து வருகின்றனர். உள்ளுர் ஊடகங்களை பொறுத்தவரையில் ஒரு இளைஞன் படுகொலை செய்யப்பட்டிருப்பது பிரதான விடயமில்லை சுடப்பட்ட போது அவன் மது அருந்திக்கொண்டிருந்தான் என்பதே பெரிய விடயமாக சித்தரித்துள்ளன. படுகொலைகளுக்கு எதிரான உணர்வு திட்டமிட்டு மழுங்கடிக்கப்படுகிறது.

ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் யாழ்மாவட்டத்தில் புளொட் உறுப்பினர்கள் இருவர் புலிகளால்� படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இன்று தற்செயலாக ஒருவர் கொலை முயற்சியிலிருந்து தப்பித்துள்ளார். முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் ஒருவரும், ஆதரவாளர் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர். ஈபிடிபி உறுப்பினர்களான முன்னாள் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் மற்றொரு முன்னாள் மாநகரசபை உறுப்பினர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயங்களுடன் தப்பித்துள்ளார். தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும் ஏற்கனவே புலிகளால் படுகொலைசெய்யப்பட்ட அமிர்தலிங்கத்தின் நெருங்கிய உறவினருமான இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை தாக்குதலிலிருந்து காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.

சமீபத்தில் யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற படுகொலைகள், அவற்றில் கொல்லப்பட்டவர்களின் விபரங்களை ஆராயும்போது இவற்றை புலிகளே மேற்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது. இராணுவத்தினரால் தமிழ் மக்கள் கொல்லப்படுவதாக கண்ணீர் வடிப்பவர்கள் புலிகளின் இந்த படுகொலைகளை கண்டுகொள்வதில்லை. ஒட்டுமொத்தமான படுகொலைகளுக்கு எதிரான நடவடிக்கைகளே படுகொலைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சரியான மார்க்கமாகும். Thanks…. EPRLF.NET

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எந்த நாட்டையும் தாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை – வட கொரியா
Next post கடல் பிராந்தியத்துக்கு சர்வதேச நாடுகள் பாதுகாப்பு வழங்கவேண்டும்.