கோவை துடியலூரில் கல்லூரி மாணவியை காதலித்து கர்ப்பிணியாக்கிய 2 பெண்டாட்டிக்காரர் கைது!!

Read Time:2 Minute, 13 Second

5723a3d4-e951-4fdb-9f43-7dd72418e22b_S_secvpfகோவை துடியலூர் வட்ட மலைபாளையம் காந்தி தெருவை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ்(வயது 31).

இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றுகிறார். இவருக்கு 7 வருடங்களுக்கு முன்பு ஒரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இவரை பிரிந்து சென்று விட்டார்.

அதன்பின்னர், ஜெயப்பிரகாஷ், 2–வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் ஜெயப்பிரகாசுக்கு அதே பகுதியை சேர்ந்த 18 வயதான கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மாணவியை காதல் வலையில் வீழ்த்தினார். மனைவியை விவாகரத்து செய்து விட்டு உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை காட்டி அவர் மாணவியுடன் பல முறை உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமடைந்தார்.

தற்போது மாணவி 6 மாத கர்ப்பமான நிலையில் ஜெயப்பிரகாசிடம் என்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என வற்புறுத்தினார். ஆனால் ஜெயப்பிரகாஷ் மழுப்பலாக பதில் கூறி உள்ளார். அப்போது தான் ஜெயப்பிரகாஷ் தன்னை ஏமாற்றியதை மாணவி உணர்ந்தார்.

இதுதொடர்பாக மாணவி துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஜெயப்பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி ஜெயப்பிரகாசை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராமநாதபுரம் அருகே தொண்டைக்குள் மீன் சிக்கியதில் வாலிபர் சாவு!!
Next post 30 பவுன் நகை கேட்டு இளம்பெண் சித்ரவதை: சென்னை போலீஸ்காரர் உள்பட 5 பேர் மீது வழக்கு!!