மாற்றுத்திறனாளி கணவரை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் இளம்பெண் ஓட்டம்!!

Read Time:2 Minute, 36 Second

5123c532-d883-4cfe-8261-1811e1273b42_S_secvpfகரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்தவர் பாபு, ஜவுளி மடித் தொழிலாளி. இவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமா நிலையூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

பாபு அடிக்கடி தனது மனை வியின் ஊருக்கு சென்று வந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளி ஒருவரின் மனைவியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது. 2 குழந்தைகளுக்கு தாயான அவரும் சிறிதும் யோசிக்காமல் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கள்ளக்காதலன் பாபுவுடன் ஓட்டம் பிடித்தார்.

மனைவி மாயமானதால் தனது 2 குழந்தைகளையும் பராமரிக்க முடியாமல் மாற்றுத்திறனாளி தவித்தார். பல்வேறு இடங்களில் மனைவியை தேடியும் பலன் இல்லை. இதற்கிடையே பாபுவின் உறவினர்களே கரூர் லாலாபேட்டை பகுதியில் பதுங்கி இருந்த அவரையும், அவரது கள்ளக்காதலியையும் கண்டுபிடித்தனர்.

இருவரையும் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் தகவலின் பேரில் இருதரப்பு உறவினர்களும் அங்கு திரண்டனர். மாற்றுத்திறனாளியும் தனது மனைவியின் தவறை மறந்து அவருக்கு அறிவுரை கூறி அழைத்து செல்ல வந்தார். மனைவியை மன்னித்து ஏற் றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

ஆனால் அவரோ கணவரும் வேண்டாம், கள்ளக்காதலனும் வேண்டாம். நான் என் பெற்றோர் வீட்டுக்கே செல்கிறேன் என கூறிவிட்டார். இதையடுத்து போலீசாரும் அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதற்கிடையே 2 குழந்தைகளுக்கு தாயான பின்னர் மாற்றுதிறனாளியை தவிக்கவிட்டு சென்ற பெண்ணை அங்கு வந்த இரு தரப்பு உறவினர்களும் திட்டி தீர்த்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவாடானை அருகே பெண் குத்திக்கொலை: மருமகனுக்கு வலைவீச்சு!!
Next post சேலம் அருகே வாலிபர் கழுத்து நெரித்து கொலை!!