பாலக்காடு அருகே கோவை பெண் மர்மச்சாவு: கள்ளக்காதலன் கைது!!

Read Time:1 Minute, 28 Second

ecf17d54-7aee-4a09-934f-c4d017f270f2_S_secvpfகேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள கோட்டக்கரையை சேர்ந்தவர் சரசா(வயது 40). இவரது சொந்த ஊர் கோவை. கணவரை பிரிந்த சரசா கோட்டக்கரையில் கண்ணன்(43) என்பவருடன் வசித்து வந்தார். இவர் மனைவியை பிரிந்தவர்.

சரசாவும், கண்ணனும் கோட்டக்கரையில் உள்ள ஓட்டலில் வேலைபார்த்து வந்தனர். பணம் கொடுக்கல் வாங்கலில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் சரசா வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை.

இது குறித்து அகழி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் தேவசி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் சரசா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சரசா இறந்தது எப்படி? என்று தெரியவில்லை. அவரது மர்மச்சாவு குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கள்ளக்காதலன் கண்ணனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொல்கத்தாவில் 71 வயது கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்ட வழக்கு: முக்கிய குற்றவாளி கைது!!
Next post இருதலைக் கொள்ளி எறும்பான நிலையில் த.தே.கூ!!