பெண்களின் அழகு, ஆரோக்கியத்திற்கு கற்றாழை உணவுகள்..!!

Read Time:5 Minute, 10 Second

timthumb (1)கற்றாழையில் பல வகைகள் இருக்கின்றன. அவை: சிறு கற்றாழை, பெருங்கற்றாழை, பேய்கற்றாழை, கருங்கற்றாழை, செங்கற்றாழை! இப்படி வகைகள் பல இருந்தாலும், அவைகளில் மருத்துவ குணங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கின்றன.

கற்றாழைக்கு ‘குமரி’ என்ற இன்னொரு பெயரும் உண்டு. அதற்கு இளம் பெண் என்று பொருள். இதனை முறையாக பயன்படுத்தினால் பெண்களுக்கு இளமையும், ஆரோக்கியமும், அழகும் கிடைக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பத்தடை தொடர்புடைய பல்வேறு சிக்கல்களை தீர்க்கும் மருந்துகள் கற்றாழையில் தயாராகிறது. வேறு பல மருந்துகளும் இதில் தயாரிக்கப்படுகிறது.

கற்றாழையில் தண்ணீர் சத்து அதிகம் உள்ளது. அதில் இருக்கும் கொழகொழப்பான தன்மை ‘கிளைக்கோ புரோட்டின்’ என்ற ஒரு வகை புரதத்தால் உண்டாகிறது. இந்த புரதம் வலிகளையும், வீக்கத்தையும் நீக்கும் சக்தி வாய்ந்தது.

கற்றாழையில் உள்ள சர்க்கரை சத்துகள் உடல் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. சருமத்தை மென்மையாக்கும். சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, புது செல்களை உருவாக்கும்.

கோடைக்காலத்தில் சருமத்தில் தோன்றும் வியர்க்குரு, அரிப்பு மற்றும் தேமல்களுக்கு கற்றாழை மருந்தாகிறது. அதில் இருக்கும் கொழகொழப்பான புரதப்பகுதியை எடுத்து, சருமத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து கழுவவேண்டும்.

தோலில் உண்டாகும் சோரியாஸிஸ் நோய்க்கு கற்றாழையின் தசைப் பகுதியை எடுத்து, தினமும் பூசி அரை மணி நேரம் வைத்திருக்கவேண்டும். கற்றாழையில் உள்ள நீர் சத்தை சருமம் வேகமாக உள்ளிழுத்துக் கொள்ளும். அதனால் சருமத்தில் ஈரப்பதம் அதிகரித்து, சருமம் மென்மையடையும்.

கற்றாழை தசைப் பகுதியை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும். முகசுருக்கம் நீங்கும். கரும்புள்ளிகள் அகலும். வெயிலில் செல்வதால் முகத்தில் உண்டாகும் நிறமாற்றங் களும் சீராகும்.

தீக் காயங்களில் கற்றாழை தசைப் பகுதியை வைத்துகட்டினால் புண்கள் விரைவாக ஆறும். கற்றாழையில் உள்ள புரதம், சருமம் நார்திசுக்களை உற்பத்தி செய்யவும் துணைபுரியும்.

கற்றாழை மேல்தோலை நீக்கிவிட்டு, அதன் தசைப் பகுதியை எடுத்து தண்ணீரில் ஐந்து முறை நன்கு கழுவி 30 கிராம் அளவு தினமும் சாப்பிட்டு வரவேண்டும். சாப்பிட்டால் உடல் சூடு நீங்கும். மலச்சிக்கல் தீரும். மூலநோய்கள் மற்றும் மூலத்தில் உள்ள சூடு கட்டுப்படும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளில் நிவாரணம் கிடைக்கும். வயிற்றுப் புண் கட்டுப்படும். உடலில் உள்ள சர்க்கரையின் அளவும், கெட்ட கொழுப்பின் அளவும் குறையும். மலச்சிக்கல் உள்ளவர்கள் கற்றாழை சோற்றை 50 கிராம் அளவு சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும்.

கோடைக்காலத்தில் வைரஸ் கிருமிகளின் தாக்கத்தால் கண் வீக்கம், கண்சிவப்பு, கண்எரிச்சல் போன்றவை ஏற்படும். இதற்கு கற்றாழையின் தசைப் பகுதியில் படிகார தூள் தூவி, கண்களை மூடிக்கொண்டு கண்களில் வைத்துக் கட்டவேண்டும். வலி, வீக்கம், எரிச்சல் நீங்கும்.

கற்றாழை கூந்தல் தைலம் தயாரிப்பதற்கும், உடல் அழகுக்கு பயன்படுத்தும் பல்வேறு கிரீம் வகைகள் தயாரிப்பதற்கும் பயன்படுகிறது.

கற்றாழையை இதய நோய்களுக்கு மருந்து உட்கொள்பவர்கள் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு மருந்து சாப்பிடுபவர்கள் பயன்படுத்த கூடாது.

தீக் காயங்களுக்கு சிறந்த முதல் உதவி மருந்து, கற்றாழை. இதனை மிக எளிதாக வீடுகளில் சிறு தொட்டிகளில் வளர்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்ற மகளையே தன் காமப்பசிக்கு இரையாக்கிய மனித மிருகம்!!
Next post பெண் சிசு கொல்லப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்!!