யோகா செய்வது மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பயிற்சி அளிக்கும் இஸ்லாமிய பெண்!!

Read Time:2 Minute, 3 Second

747c8a13-5355-43bb-babd-9e955e17b18e_S_secvpfஇஸ்லாமிய பெண் ஒருவர் பல ஆண்டுகளாக யோகா செய்வது மட்டும் அல்லாமல் மற்றவர்களுக்கும் கற்பிக்கவும் செய்கிறார்.

இஸ்லாமியர்களை யோகா செய்ய சொல்வது பற்றி சிலர் ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த சையத் ரூபா பாத்திமா என்ற 47 வயது பெண் பல ஆண்டுகளாக யோகா செய்வது மட்டும் அல்லாமல் பள்ளி ஒன்றில் யோகாவை கற்பித்தும் வருகிறார்.

இது பற்றி அந்த பெண் கூறும்போது, யோகா என்பது ஒரு உடற்பயிற்சிதான். அது எவ்வித மத உணர்வுகளையும் காயப்படுத்துவது இல்லை. நமாஸ் செய்யும் போது அல்லாவைத் தவிர வேறு எதையும் நினைக்கக் கூடாது என குரான் சொல்கிறது. ஆனால், நமது மனது பல வகையான கவனச் சிதறலுக்கு உள்ளாகிறது. யோகா மனதை ஒருநிலைப்படுத்த உதவுகிறது. நான் நமாஸ் செய்யும்போது மனதை ஒருநிலைப்படுத்தி கவனம் சிதறாமல் அல்லாவை வணங்க யோகா பயன்படுகிறது.

‘ஓம்’ என உச்சரிப்பது ஒன்றும் கட்டாயம் இல்லை. ஆனால், ஓம் என உச்சரிக்கும்போது உடலில் ஒருவித அதிர்வுகள் ஏற்படுகிறது. அதே அதிர்வுகளை ஏற்படுத்த அல்லாவின் 99 பெயர்களில் ஓம் என்ற உச்சரிப்புடன் ஒத்த ஒலியை கொண்ட பெயரை தேர்வு செய்ய முயற்சித்து வருகிறேன். மேலும் யோகாவின் சமஸ்கிருத பெயர்களை பயன்படுத்த விரும்பாவிட்டால் மொழி மாற்றம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாஜ்மகாலில் வைபை வசதி: முதல் அரை மணி நேரத்துக்கு இலவசம்!!
Next post காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: வெல்டருடன் ஆசிரியை போலீசில் தஞ்சம்!!