திண்டிவனத்தில் கோவிலில் சாமி கும்பிட்டபோது தீப்பிடித்து உடல் கருகிய பெண்!!

Read Time:1 Minute, 13 Second

5ea5f8eb-078e-4c9d-8ec5-9243be0ba00d_S_secvpfதிண்டிவனம் தீர்த்தகுளம் பகுதியை சேர்ந்தவர் சுமதி (வயது 54), விதவைப் பெண். இவரது மகன், மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. எனவே, சுமதி தனியாக வசித்து வந்தார்.

இவர், அதே பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்றார். கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டபோது அவரது சேலையின் முந்தானை அருகில் எரிந்துக்கொண்டிருந்த அகல் தீபத்தில் பட்டது.

மறுவினாடியே அவரது சேலையில் தீப்பிடித்தது. இதனால் சுமதி உடல் கருகி அலறினார். சத்தம் கேட்டு கோவிலில் இருந்த பிற பக்தர்கள் ஓடி வந்தனர். தீ பரவாமல் அணைத்து, சுமதியை மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

திண்டிவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கன்னியாகுமரி அருகே 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது!!
Next post வாழப்பாடி அருகே கள்ளக்காதலனுடன் வாழ்ந்து வந்த இளம்பெண் மர்ம சாவு!!