கன்னியாகுமரி அருகே 9 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை: வாலிபர் கைது!!

Read Time:1 Minute, 35 Second

9688c7ee-a952-4d6d-b3cb-feab27a0daf9_S_secvpfகன்னியாகுமரியை அடுத்த சந்தையடி இடையன் விளையைச் சேர்ந்தவர் ஜெப செல்வின் (வயது 23).

இவரது வீடு அருகே வசித்து வரும் 9 வயது சிறுவன் ஒருவன் நேற்று அருகில் உள்ள ஆலயத்திற்கு புறப்பட்டார். வெளியே சென்ற சிறுவன் சிறிது நேரத்தில் கதறி அழும் சத்தம் கேட்டது.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது ஜெப செல்வின் வீட்டில் இருந்து சிறுவன் அழுது கொண்டே வருவதை கண்டனர்.

அவனை மீட்டு வந்த பெற்றோர் சிறுவனின் அழுகைக்கான காரணம் குறித்து கேட்டனர். அதற்கு அவன், தன்னை வாலிபர் ஜெப செல்வின் பாலியல் தொல்லை செய்ததாக கூறினார்.

இதைக்கேட்டு ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர் சம்பவம் பற்றி கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் அங்கையர்கன்னி, சப்–இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாலிபர் ஜெப செல்வின் கைது செய்யப்பட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தையுடன் நள்ளிரவில் வீட்டுக்கு வெளியே தூங்கிய 1½ வயது சிறுவனை கடத்திய பெண் சிக்கினார்!!
Next post திண்டிவனத்தில் கோவிலில் சாமி கும்பிட்டபோது தீப்பிடித்து உடல் கருகிய பெண்!!