சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய்–மகள் உள்பட 4 பேர் தீக்குளிக்க முயற்சி!!
சேலம், கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி. இவருடைய மனைவி லட்சுமி (வயது 60). இவர்களுக்கு 2 மகள், 2 மகன்கள் உள்ளனர்.
மகள் வசந்தி(46)க்கு திருமணம் ஆகிவிட்டது. மகன்கள் முருகேசன்(42), குமார் (35) ஆகியோருக்கும் திருமணம் ஆகிவிட்டது.
இந்த நிலையில், வசந்தியும் அவரது தாய் லட்சுமியும் இன்று சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்தனர். அப்போது அவர்கள் 2 பேரும் மண்எண்ணெய் கேனை இடுப்பில் மறைத்து வைத்து கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
2 பேரும் மாவட்ட கலெக்டர் மகர பூஷணத்திடம் மனு கொடுத்தனர். அப்போது 2 பேரும் இடுப்பில் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை எடுத்து திடீரென தங்களது தலையில் ஊற்றினார்கள். கலெக்டரின் முன்பு நடந்த இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வசந்தியும், அவரது தாய் லட்சுமியும் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்வதை கண்டதும் போலீசார் அவர்கள் 2 பேரையும் தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை வாங்கி அப்புறப்படுத்தினர்.
மகள் வசந்தி கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
தந்தை சின்னதம்பிக்கு சொந்தமாக கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோவில் அருகில் 2 வீடுகள் உள்ளன. மூத்த மகன் முருகேசன் ஒரு வீட்டிலும் மற்றொரு மகன் குமார் மற்றொரு வீட்டிலும் வசித்து வருகிறார்கள். இதில் முருகேசன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் வசித்து வந்த வீட்டை எனக்கு விற்று விட்டார்.
இந்த நிலையில் தம்பி குமார், அந்த வீட்டை எழுதி தருமாறு கூறி தன்னை அடிக்கடி மிரட்டி வருவதாகவும், இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளதாகவும் புகாரில் கூறியிருந்தார்.
மற்றொரு சம்பவம்…
சேலம், இரும்பாலை அருகே உள்ள கிரம்பாப்பம் பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகப்ப கவுண்டர். இவருடைய மகன்கள் அய்யனார், குழந்தை கவுண்டர் உள்பட 6 மகன்கள் உள்ளனர்.
இதில் அய்யனாருக்கு திருமணமாகி மகன் உள்ளார். இவருடைய மகன் காமராஜ் (வயது 37) டைல்ஸ் பதிக்கும் கூலி தொழிலாளி.
இவர் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
இதில் சின்ன தாத்தாவின் மனைவி கிருஷ்ணம்மா, இவருடைய மகன்களுக்கும் மற்றும் கிருஷ்ணன் மகன் காமராஜூக்கும் என சேர்த்து கூட்டுபட்டாவாக மொத்தம் 3 ஏக்கர், 38 சென்ட் நிலம் உள்ளது. இதில் தனக்கு சொந்தமாக 60 சென்ட் நிலம் உள்ளது. இது தொடர்பான வழக்கும் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கிருஷ்ணம்மா மற்றும் அவருடைய மகன்கள் ஒரே பட்டாவாக தயாரித்து அந்த இடத்தை விற்பனை செய்வதற்கு முயற்சி செய்துள்ளனர். இது தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 தடவை மனு கொடுத்துள்ளேன்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
காமராஜ் மனு கொடுக்கும் முன்னதாக பையில் பதுக்கி வைத்திருந்த மண் எண்ணெயை எடுத்து தலையில் ஊற்ற முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு நின்று போலீசார் அந்த மண்எண்ணெய் கேன் மற்றும் பையை பறிமுதல் செய்தனர். காமராஜ் மனு கொடுப்பதற்கு கலெக்டர் அலுவலக மெயின் வாசல் வழியாக வரவில்லை. பின்புறம் உள்ள பூட்டப்பட்டிருந்த கேட் வழியாக ஏறி குதித்து வந்து இந்த தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார்.
சேலம் காரிப்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் மனோஜ் சூரியா (வயது 25). இவர் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 40 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஏக்கர் நிலம் மற்றும் 55 சென்ட் நிலத்தை அரசு கையகப்படுத்தியது.
இது தொடர்பாக நிலத்தின் உரிமையாளர்கள் வழக்கு போட்டனர். இதில் வழக்கு அரசுக்கு சாதகமாக வந்தது. ஆனால் அந்த பகுதியில் உள்ள சிலர் இடத்தின் உரிமையாளர்களிடம் இருந்து பணம் வசூல் செய்துள்ளனர். இதுவரை அந்த இடத்தை வாங்கியும் கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
ஏமாற்றிய அந்த சில நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஏழை மக்களுக்காக நான் என்று உயிரை மாய்த்துக் கொள்கிறேன் என்று கூறி மனோஜ் சூரியா மண்எண்ணெயை தலையில் ஊற்றினார்.
Average Rating