ரத்த சோகை நோயால் அவதிப்படும் 5 வயது சிறுமி: கலெக்டரிடம் பெற்றோர் மனு!!

Read Time:1 Minute, 37 Second

a64fc047-45a5-436e-bd4e-ba6792450300_S_secvpfஈரோடு–கரூர் மெயின் ரோட்டில் உள்ள சோலார் புதூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி உஷா. இவர்களது மகள் தியாஸ்ரீ (வயது 5).

யுவராஜ், தனது மனைவி, மகளுடன் ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று வந்தார். அங்கு நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் கலெக்டர் பிரபாகரை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார்.

அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:–

எனது மகள் தியாஸ்ரீ 6 மாத குழந்தையாக இருந்த போதே ரத்த சோகை நோயால் (தலசியா மேஜர்) அவதிப்பட்டு வருகிறாள். இதனால் மாதாமாதம் மருத்துவமனைக்கு சென்று புது ரத்தம் செலுத்தப்படுகிறது. இதற்கு ரூ.2500 செலவாகிறது.

மேலும் இந்த நோயை குணப்படுத்த ஆபரேசன் செய்ய வேண்டும் என்றால் மருத்துவ செலவு ரூ.30 லட்சம் வரை ஆகும் என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆட்டோ டிரைவரான என்னால் மருத்துவ செலவு செய்ய வசதி இல்லை. எனவே தாங்கள் எனது மகளின் மருத்துவ செலவுக்கு அரசின் நிதிஉதவி பெற்று வழங்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் உளவு பார்க்கும் கருவி கண்டுபிடிப்பு!!
Next post ஸ்ரீரங்கத்தில் மாயமான காவலாளி உறையூரில் மர்ம சாவு!!