டெல்லி லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் உளவு பார்க்கும் கருவி கண்டுபிடிப்பு!!

Read Time:1 Minute, 29 Second

392b0f89-1075-411c-bcbc-0d07df064905_S_secvpfடெல்லியில் அதிகாரிகள் நியமனம் தொடர்பாக முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், கவர்னர் நஜீப்ஜங்குக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அங்கு மாநில லஞ்ச ஒழிப்பு துறை தலைவராக எம்.கே.மீனா என்பவரை கவர்னர் நியமனம் செய்தார். இந்த நியமனத்திற்கு கெஜ்ரிவால் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவர் பதவி ஏற்கவும் அனுமதிக்கவில்லை. இதனையும் மீறி மீனா பொறுப்பு ஏற்றார்.

இந்தநிலையில் மீனா பணிபுரியும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் உளவு பார்க்கும் கருவி கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது மேஜையை மீனா சுத்தம் செய்தபோது, பேனா வடிவிலான உளவு பார்க்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தார். அந்த கருவியை சோதனை செய்தபோது, அதில் எதுவும் பதிவாகவில்லை.

திட்டமிட்டு உளவு பார்க்கும் கருவியை யாரும் வைத்து சென்றார்களா? அல்லது தவறுதலாக வைத்து சென்றார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவர்-சிறுமிகளை கடத்திச்சென்று பிச்சை எடுக்க வைத்ததாக 8 பெண்கள் ஒடிசாவில் கைது!!
Next post ரத்த சோகை நோயால் அவதிப்படும் 5 வயது சிறுமி: கலெக்டரிடம் பெற்றோர் மனு!!