சாம்சங்கின் போட்டியை சமாளிக்க ஆப்பிள் புதிய திட்டம்!!

Read Time:1 Minute, 42 Second

3084a41d-59f2-4d29-a88b-9c642ed5fbfb_S_secvpfஇந்தியாவில் சாம்சங்கின் போட்டியை சமாளிக்கும் விதமாக ஆப்பிள் நிறுவனம் டெல்லியை சேர்ந்த செல்போன் விநியோக நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.

உலக அளவில் ஸ்மார்ட்போன் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் நிறுவனங்கள் என்றால் அது ஆப்பிளும் சாம்சங்கும் தான். ஆனால் சமீபகாலமாக சாம்சங்கின் ஆதிக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவில் அதன் விற்பனை வேகமாக உயர்ந்து வருகிறது. இதற்கு மாறாக ஆப்பிளின் விற்பனை பெரிய அளவில் உயரவில்லை.

இதனை சரி செய்யும் பொருட்டு இந்தியாவின் முக்கிய செல்போன் விநியோக நிறுவனமான ஆப்டிமசுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் தனது தயாரிப்புகளை வேகமாக அனுப்ப முடியும் என நினைக்கிறது ஆப்பிள். மேலும் வரும் மூன்று ஆண்டுகளில் தனது விற்பனையை இரண்டு மடங்காக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவை பொருத்தவரையில் எண்ணிக்கை அடிப்படையில் சாம்சங் விற்பனையானது 28 சதவீதமும், மைக்ரோமேக்ஸ் 15 சதவீதமும், ஆப்பிள் 2 சதவீதமாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரூ. 5 கோடி கேட்டு ராஞ்சி பேராயருக்கு கொலை மிரட்டல்: ஜார்க்கண்ட் தீவிரவாதி கைது!!
Next post 2 வயதில் திருமணம் – 13 வயதில் விதவை: ராஜஸ்தான் சிறுமிக்கு நடந்த கொடுமை!!