ரூ. 5 கோடி கேட்டு ராஞ்சி பேராயருக்கு கொலை மிரட்டல்: ஜார்க்கண்ட் தீவிரவாதி கைது!!

Read Time:1 Minute, 49 Second

08d5f0f2-606d-4ae5-bd32-4b47959c69c0_S_secvpfஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களின் பேராயராக (ஆர்ச் பிஷப்) பதவி வகிப்பவர், டெல்ஸ்போர் டோப்போ.

கடந்த மே மாதம் இவருக்கு ஒரு கடிதம் வந்தது. இந்திய மக்கள் விடுதலை முன்னணி என்ற தீவிரவாத இயக்கத்தின் டும்கா மாவட்ட தளபதி என்று தன்னை அறிமுகப்படுத்தி கொண்ட ஜானி என்ற தேவேஷ் தத்தா, டெல்ஸ்போர் டோப்போ உடனடியாக தனக்கு 5 கோடி ரூபாய் மாமூலாக தர வேண்டும். இல்லாவிட்டால் அவரை கொன்றுவிடுவதாக அந்த கடிதத்தின் மூலம் மிரட்டல் விடுத்திருந்தான்.

அந்த பணத்தை மேற்கு வங்காளம் மாநிலத்தின் பிர்பம் மாவட்டத்தை சேர்ந்த அமித் என்பவரிடம் கொடுத்து விட வேண்டும் என கெடு விதித்திருந்த அந்த தீவிரவாதி, அமித் என்பவரை தொடர்பு கொண்டு பேசுவதற்கான கைபேசி எண்ணையும் அளித்திருந்தான்.

தொடர்ந்து பணம் கேட்டு தொலைபேசி மூலமாகவும் மிரட்டிவந்த ஜானி மீது பேராயர் டெல்ஸ்போர் டோப்போ போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து, ஜானியின் நடமாட்டத்தை கண்காணித்துவந்த போலீசார், டும்கா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்த ஜானியை இன்று கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொங்கும் எரிமலைக்குள் கம்பீரமாக இறங்கிய வாலிபர்: நெஞ்சை பதற வைக்கும் வீடியோ காட்சிகள்!!
Next post சாம்சங்கின் போட்டியை சமாளிக்க ஆப்பிள் புதிய திட்டம்!!