கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கல்லூரி மாணவருடன் வெட்டி கொன்ற மனைவி!!
தேனி அல்லிநகரம் போலீஸ் சரகம் அன்னஞ்சி இந்திரா காலனியை சேர்ந்தவர் முனியாண்டி (வயது35). கூலித் தொழிலாளி. அவரது மனைவி லட்சுமி (30). இவர்களுக்கு கோகிலா (16) என்ற மகளும், ஹரிகரன் (13) மகனும் உள்ளனர்.
கடந்த வாரம் வீட்டில் தூங்கிய முனியாண்டி மாடியில் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடியபடி கிடந்தார். அதிர்ச்சி அடைந்த லட்சுமி கதறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர்.
உடனே முனியாண்டியை தூக்கிக் கொண்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.
இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரணையில் முனியாண்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது. அதன் பின்னர் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
கொலையுண்ட முனியாண்டி மனைவி லட்சுமியின் நடவடிக்கைகளையும் நோட்டமிட்டனர். அப்போது அவரது நடவடிக்கை மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே போலீசார் லட்சுமியை தொடர்ந்து கண்காணித்தனர்.
இதன் விளைவாக முனியாண்டியை கள்ளக் காதலனுடன் சேர்ந்து லட்சுமி கொலை செய்திருப்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். போலீசில் லட்சுமி அளித்த வாக்குமூலம் விவரம் வருமாறு:–
எனக்கும் எனது ஊரைச் சேர்ந்த முத்து (21) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முத்து ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் எனது உறவினர் மகன். எனவே அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார்.
அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. முத்து என்னிடம் ஆறுதலாக பேசுவார். நான் அவரது பேச்சில் மயங்கினேன். சில நாட்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் உல்லாசமாக இருந்தோம். இந்த விவரம் எனது கணவருக்கு தெரிய வந்தது. அவர் எங்கள் 2 பேரையும் கடுமையாக எச்சரித்தார்.
இதனால் நான் மனமுடைந்தேன். முத்துவிடம் பேசாமல் என்னால் இருக்க முடியவில்லை. முத்துவை சந்தித்து எனது கணவரை கொலை செய்யலாம் என்று தெரிவித்தேன். அவர் இதற்கு சம்மதித்தார்.
அதன்படி சம்பவத்தன்று இரவு எனது கணவர் முனியாண்டி அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு மாடியில் படுத்து தூங்கினார். இதுதான் தக்கம் சமயம் என எதிர்பார்த்து உடனே முத்துவுக்கு தகவல் தெரிவித்தேன். நள்ளிரவு நேரம் முத்து எனது வீட்டுக்கு வந்தார். அப்போது எனது கணவர் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தார்.
உடனே 2 பேரும் சேர்ந்து அவரை சரமாரியாக வெட்டினோம். வெட்டுபட்ட அவர் வலியால் கத்தினார். உடனே முத்துவை அங்கிருந்து தப்பி ஓட கூறினேன். இருட்டுக்குள் ஓடுவதை பார்த்து நானும் திருடன், திருடன் என கத்தினேன். எனது சத்தம்கேட்டு உறவினர்களும் வந்தனர். எனது கணவரை யாரோ வெட்டிவிட்டு சென்றதாக நாடகமானடினேன்.
அதன் பின்னர் எனது கணவரை தூக்கிக்கொண்டு உறவினர் உதவியுடன் ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். ஆனால் அவர் இறந்து விட்டார். என்மீது போலீசாரின் பார்வை திரும்பியது. இதனை அறிந்த நான் முத்துவுடன் கேரளாவுக்கு தப்பி செல்வதற்காக பஸ் நிலையத்தில் நின்றேன். அப்போது முத்து அங்கு வந்தார். எங்களை நோட்டமிட்ட போலீசார் கைது செய்து விட்டனர்.
இவ்வாறு வாக்கு மூலத்தில் அவர் கூறி உள்ளார்.
கைதான 2 பேரும் தேனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அவர்களை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Average Rating