ஆந்திர கள்ளக்காதல் ஜோடி உடல்கள் பிரேத பரிசோதனை: கன்னியாகுமரியில் தகனம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு!!

Read Time:5 Minute, 6 Second

da24c35b-6421-48f6-8659-00fd490eef0a_S_secvpfஆந்திராவை சேர்ந்த ஒரு ஜோடி 12 வயது சிறுவன் ஒருவனுடன் கடந்த 4–ந் தேதி கன்னியாகுமரி வந்தனர்.

அவர்கள் விவேகானந்த புரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். இரண்டு நாட்கள் ஊரை சுற்றிபார்த்த அவர்கள் பின்னர் அந்த அறையிலேயே தற்கொலை செய்து கொண்டனர்.

இது பற்றி லாட்ஜ் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேரின் உடல்களும் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. அடையாளம் தெரிந்த பின்பே அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யவும் முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து கன்னியாகுமரி போலீசார் இறந்தவர்கள் யார்? என விசாரித்த போது அவர்கள் லாட்ஜில் கொடுத்திருந்த விலாசம் போலியானது என தெரியவந்தது. எனவே போலீசார் இறந்து கிடந்தவர்களின் புகைப்படங்களை ஆந்திர போலீசாருக்கு அனுப்பி வைத்து அவர்களின் விபரங்களை கேட்டனர்.

இதில் தற்கொலை செய்தவர்கள் ஆந்திர மாநிலம் விஜயவாடாவை அடுத்த மாச்சவரம், மாருதி நகர், காட்டூர்வாரியை சேர்ந்த சின்னி அனில் குமார் யாதவ் (வயது 35), கல்யாணி (35), கல்யாணியின் மகன் உஜ்வல் யாதவ் (12) என தெரியவந்தது.

கல்யாணி ஏற்கனவே திருமணமானவர். அவரது கணவர் உம்மிடி சீனிவாச யாதவ். தெலுங்கு தேச பிரமுகரான இவர் இறந்து விட்டார். இதனால் அவரிடம் உதவியாளராக இருந்த படாலக் கணக்காராவ் என்பவருடன் கல்யாணிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இதை உறவினர்கள் கண்டித்ததால் கல்யாணி, அவரை கைகழுவி விட்டு அதே பகுதியை சேர்ந்த சின்னி அனில்குமார் யாதவுடன் பழக்கம் ஏற்படுத்தி கொண்டார்.

இந்த நிலையில் படாலக் கணக்காராவ் திடீரென இறந்து போனார். அவரது சாவின் மர்மம் குறித்து போலீசார் கல்யாணியிடம் விசாரித்தனர். மேலும் சின்னி அனில் குமார் யாதவுடன் மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என கூறினர். இதனால் பயந்து போன கல்யாணி, மகன் உஜ்வல் யாதவை அழைத்து கொண்டு கள்ளக்காதலன் சின்னி அனில் குமார் யாதவுடன் கன்னியாகுமரி வந்து விட்டார். இங்கு வந்த பின்பு தான் அவர்கள் 3 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

இதற்கு காரணம் என்ன என்பது போலீசாருக்கு புரியாத புதிராகவே உள்ளது. 3 பேரும் சேர்ந்தே தற்கொலை செய்தார்களா? அல்லது சின்னி அனில் குமார் யாதவ், கல்யாணி மற்றும் அவரது மகன் உஜ்வல் யாதவை கொன்றுவிட்டு பின்னர் தற்கொலை செய்தாரா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

இது பற்றி கன்னியாகுமரி போலீசார் கூறும்போது, 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்த பின்பே இது பற்றிய உண்மை தெரியவரும். அதற்காகவே நாங்களும் காத்திருக்கிறோம் என்றனர்.

இதற்கிடையே ஆந்திர போலீஸ் உதவியுடன் கன்னியாகுமரி வந்த கல்யாணியின் சகோதரர் மற்றும் சின்னி அனில் குமார் யாதவின் உறவினர்கள் அனைவரும் 3 பேரின் உடல்களை அடையாளம் காட்டியதை தொடர்ந்து அவர்களின் உடல்கள் இன்று ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பின்னர் உடல்கள் ஒப்படைக்கப்பட்ட பின்பு அவற்றை தங்களின் சொந்த ஊருக்கு எடுத்து செல்ல 3 பேரின் உறவினர்களும் மறுத்து விட்டனர். கன்னியாகுமரியிலேயே உடல்களை தகனம் செய்து விட ஏற்பாடு செய்ய வேண்டும் என போலீசாரிடம் கேட்டுக்கொண்டனர்.

இதையடுத்து 3 பேரின் உடல்களையும் விவேகானந்த புரத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூடங்குளம் அருகே வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்: போலீசார் நடவடிக்கை!!
Next post பொள்ளாச்சி கல்லூரி மாணவர் மாயமான வழக்கில் கைதான 3 பேருக்கும் மாவோயிஸ்டு தலைவர் ரூபேசுடன் தொடர்பு!!