வேடசந்தூரில் வினோத திருவிழா: உயிரோடு பாடை கட்டி ஊர்வலமாக வந்த மக்கள்!!

Read Time:2 Minute, 53 Second

63f15450-d5da-4748-b0ea-4a87a891e7a0_S_secvpfதமிழகத்தில் உள்ள கிராமங்களில் பல வகை திருவிழாக்கள் நடத்தப்படுவதுண்டு. சில கிராமங்களில் வழக்கத்துக்கு மாறாக வினோதமான திருவிழாவும் நடத்தப்படும். அதுபோன்ற ஒரு திருவிழா வேடசந்தூர் அருகே நடைபெற்றது.

வேடசந்தூர் அருகில் உள்ள சிங்கிலிக்காம்பட்டியில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் கடந்த 18 வருடமாக திருவிழா நடத்தப்படவில்லை.

ஒவ்வொரு வருடமும் திருவிழா நடத்துவதற்காக ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி கோவில் முன்பு அமர்ந்து உத்தரவு கேட்பது வழக்கம். அதன்படி கடந்த 18 வருடமாக திருவிழா நடந்த உத்தரவு கிடைக்கவில்லை. இந்த வருடம் திருவிழா நடத்த உத்தரவு கிடைத்ததால் அந்த கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

18 வருடம் கழித்து திருவிழா நடத்துவதால் சம்பிரதாய சடங்கு நடத்தி தோஷம் கழிப்பது வழக்கம். கடந்த 3 நாட்களாக நடந்து வந்த திருவிழாவின் நிறைவு நாள் விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரை இறந்தவர் போல் பாவித்து அவரை படுக்க வைத்து பெண்கள் ஒப்பாரி வைத்தனர்.

பின்னர் அவருக்கு பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஊர்வலத்துக்கு பின்னால் கரகம் மற்றும் அம்மன் சிலைகள் எடுத்து வரப்பட்டன. இறந்தவர் உடலை கோவிலுக்கு அருகில் உள்ள ஒரு இடத்தை தேர்வு செய்து தலையை மட்டும் விடுத்து உடல் முழுவதையும் மண்ணுக்குள் புதைத்தனர். அதன் பிறகு கோவில் பூசாரி அங்கு வந்து அருள் வாக்கு கூறி அவரது நெற்றியில் திருநீரு பூசினார். அதன் பின்னர் அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டு குளிக்க வைத்து கோவிலில் சாமி கும்பிட்டு சென்றார்.

இந்த வினோத திருவிழாவை காண சிங்கிலிக்காம்பட்டி, கரிதிகவுண்டன் வலசு, அய்யாகவுண்டனூர், கல்வார்பட்டி, மாமரத்து தோட்டம், தெற்கு தோட்டம், கூவனூத்து, வள்ளிப்பட்டி, பள்ளப்பட்டி, தொண்ணிக்கல்பட்டி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெங்களூரு கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை: கைதான மனைவி போலீசில் பரபரப்பு வாக்குமூலம்!!
Next post கூடங்குளம் அருகே வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்: போலீசார் நடவடிக்கை!!