கன்னியாகுமரியில் இறந்த 3 பேர் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுடன் தெலுங்குதேச பிரமுகர் மனைவி தற்கொலை!!

Read Time:7 Minute, 27 Second

dcf043ee-54d7-4d9e-8df9-ef0f384c3bac_S_secvpfகன்னியாகுமரி விவேகானந்தபுரம் சந்திப்பில் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 4–ந்தேதி ஒரு ஆணும், பெண்ணும், 12 வயது சிறுவனுடன் வந்து அறை எடுத்து தங்கினர்.

கணவன்–மனைவி என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள் லாட்ஜ் ஊழியர்களிடம் தங்களின் பெயர் அனில்குமார் சவுத்ரி, ஆந்திரா மாநிலம், விஜயவாடாவை அடுத்த மஞ்சாலுதுறை என முகவரி கொடுத்தனர். அங்கிருந்து கன்னியாகுமரியை சுற்றிப் பார்க்க வந்திருப்பதாகவும் தெரிவித்த அவர்கள் மறுநாள் முழுவதும் கன்னியாகுமரியை சுற்றிப் பார்த்தனர்.

அதற்கு மறுநாள் அவர்களின் அறைக்கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் கன்னியாகுமரி போலீசார் துணையுடன் அறைக்கதவை உடைத்து பார்த்தனர்.

அங்கு ஆணும், பெண்ணும் தூக்குப்போட்டு இறந்த நிலையிலும், அவர்களுடன் இருந்த சிறுவன் விஷம் குடித்த நிலையிலும் இறந்து கிடந்தனர். அவர்களின் உடல் அருகே ஒரு கடிதமும் இருந்தது. அதில், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாகவும், தங்களின் உடலை கன்னியாகுமரியிலேயே அடக்கம் செய்து விட வேண்டுமென்றும் கூறி இருந்தனர்.

இறுதிச்சடங்கிற்கு தாங்கள் அணிந்திருக்கும் நகையை பயன்படுத்தி கொள்ளுமாறும், தாங்கள் இறந்த தகவலை உறவினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பிட்டிருந்தனர். போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர்களின் உருவப்படங்களை ஆந்திர மாநில போலீசாருக்கு அனுப்பி வைத்து அவர்கள் பற்றிய விவரங்களை கேட்டனர். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக நடந்த விசாரணையில், லாட்ஜில் இறந்து கிடந்த 3 பேர் பற்றிய அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தது.

லாட்ஜில் இறந்து கிடந்த அனில்குமார் சவுத்ரியின் உண்மையான பெயர் சின்னி அனில்குமார் யாதவ் (வயது 35), அவருடன் இருந்த பெண்ணின் பெயர் கல்யாணி (35), இவர்களின் சொந்த ஊர் மாரிநகர் மாச்சவரம் காட்டூர் வாடி தெருவாகும்.

கல்யாணியின் கணவர் உம்மிடி சீனிவாச யாதவ் ஆவார். இவர்களுக்கு முஜ்வல் கிருஷ்ண யாதவ் (12) என்ற மகனும் இருந்தார். உம்மிடி சீனிவாச யாதவ் அந்த பகுதி தெலுங்குதேச கட்சியின் நகரச் செயலாளராக இருந்தார். வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்தார். கடந்த 2014–ம் ஆண்டு இவர் திடீரென இறந்து போனார். அதன் பிறகு உம்மிடி சீனிவாச யாதவிடம் உதவியாளராக இருந்த படாலக் கனராவ் என்பவர் உம்மிடி சீனிவாச யாதவின் தொழிலை எடுத்து நடத்தி வந்தார்.

கடந்த மாதம் 25–ந்தேதி படாலக் கனராவ் மர்மமான முறையில் இறந்து போனார். இதுபற்றி அப்பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக அங்குள்ள போலீசாருக்கு உம்மிடி சீனிவாச யாதவின் மனைவி கல்யாணி மீது சந்தேகம் ஏற்பட்டது.

எனவே அவரை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென போலீசார் உத்தரவிட்டனர். மறுநாள் போலீசார் போலீஸ் நிலையத்தில் காத்திருந்த நிலையில், கல்யாணி தனது மகன் முஜ்வல் கிருஷ்ண யாதவுடன் மாயமாகி விட்டார்.

அவர்களுடன் பக்கத்து வீட்டில் வசித்த சின்னி அனில்குமார் யாதவும் மாயமாகி இருந்தார். இவர்களை காணாமல் தவித்த இருவரின் உறவினர்களும் போலீசில் புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கல்யாணிக்கும், சின்னி அனில்குமார் யாதவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், கல்யாணியை போலீசார் விசாரணைக்கு அழைத்ததால் பயந்து போன அவர், கள்ளக்காதலனுடன் ஊரை விட்டு மாயமானதும் தெரிய வந்தது. 3 பேரையும் போலீசார் தேடி வந்த நிலையில்தான் அவர்கள் கன்னியாகுமரி லாட்ஜில் தற்கொலை செய்த தகவல் பத்திரிகைகள் மற்றும் டெலிவிஷன் செய்திகள் மூலம் உள்ளூர் போலீசாருக்கு தெரிய வந்தது. அவர்கள் இந்த விஷயத்தை கல்யாணி மற்றும் சின்னி அனில்குமார் யாதவ் உறவினர்களுக்கு தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் நேற்றே அங்கிருந்து புறப்பட்டு இன்று காலை கன்னியாகுமரி வந்து சேர்ந்தனர். அவர்களுடன் ஆந்திர போலீசாரும் இருந்தனர். ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ள 3 பேரின் பிணங்களையும் கல்யாணி மற்றும் சின்னி அனில்குமார் யாதவின் உறவினர்கள் அடையாளம் காட்டுகிறார்கள். அதன் பிறகே மூவரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

ஆந்திராவில் இருந்து கன்னியாகுமரி வந்த போலீசாரிடம் நிருபர்கள் இறந்து போன கல்யாணி மற்றும் சின்னி அனில்குமார் யாதவ் பற்றிய விரிவான தகவல்களை கேட்டபோது, அவர்கள் வாய் திறக்க மறுத்து விட்டனர்.

மாச்சவரத்தில் மரணம் அடைந்த படாலக் கனராவ் சாவில் கல்யாணிக்கு தொடர்பு இருக்கிறதா? கள்ளக்காதலன் சின்னி அனில்குமார் யாதவுடன் சேர்ந்து அவரை கொலை செய்தாரா? என்பது பற்றி பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக ஆந்திர போலீசார் கன்னியாகுமரி போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

விசாரணைக்கு பிறகே இதன் பின்னணியில் இன்னும் என்னென்ன மர்மங்கள் உள்ளன என்பது தெரியவரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வைகை அணையில் குதித்து மதுரை என்ஜினீயர் தற்கொலை!!
Next post ஆற்காடு அருகே தனியார் நிறுவன சுவர் இடிந்து விழுந்து பள்ளி மாணவி சாவு- 3 பேர் படுகாயம்!!