ஓய்வு நேரத்தில் பக்தி… பக்தி… பக்தி…!!

Read Time:2 Minute, 27 Second

simbu2சிம்புவுக்கு கடந்த இரண்டு வருடங்கள் போதாத காலம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த இரண்டு வருடங்களில் அவருடைய நடிப்பில் உருவான எந்த படங்களும் வெளியாகவில்லை. மேலும், சில படங்கள் பாதியிலேயே நிற்கிறது. ஒரு சில படங்கள் முடிவடைந்தாலும் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இப்படியாக பல பிரச்சினைகள் அவருக்கு இருந்தாலும், படவாய்ப்புகள் அவரை தேடி வந்துகொண்டுதான் இருக்கிறது. தற்போது கௌதம் மேனன் இயக்கும் ‘அச்சம் என்பது மடமையடா’, செல்வராகவன் இயக்கத்தில் ‘கான்’ ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட ஒன்றரை மாத காலமாக இடைவிடாது இந்த படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட சிம்புவுக்கு தற்போது ஒரு சிறு ஓய்வு கிடைத்துள்ளதாம்.

இதை சிம்புவே, அவரது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மராத்தான் போல் கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக ‘அச்சம் என்பது மடமையடா’, ‘கான் ஆகிய படங்களின் படப்பிடிப்பில் ஓடி ஓடி நடித்தது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இப்போதைக்கு ஒரு சிறு ஓய்வு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

கிடைத்த ஓய்வு நேரத்தில் நண்பர்களுடன் சென்று ஜாலியாக பொழுதை கழிக்காமல், தன்னுடைய கஷ்டங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைக்க வேண்டி, மங்களூரில் உள்ள முர்தேஷ்வரா கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார் சிம்பு. அங்குள்ள சிவன் சிலையை சிம்பு வணங்கியபடி எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் அவரே தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இதன் பிறகாவது சிம்புவின் பிரச்சினைகள் அனைத்தும் விலகி, அவருக்கு ஒரு நல்ல வழி கிடைக்கும் என நம்புவோமாக.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாளையில் போலீஸ்காரரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது!!
Next post குதிரையுடன் ரொம்ப நெருக்கமான நடிகை…!!