ஓமலூர் அருகே இளம் வயது திருமணம் தடுத்து நிறுத்தம்!!

Read Time:1 Minute, 46 Second

5ad0c460-c9df-4e5f-854f-97b1814eb958_S_secvpfசேலம் மாவட்ட கலெக்டருக்கு நள்ளிரவில் ஒரு மர்ம போன் வந்தது. அதில் பேசிய நபர் ‘ஓமலூர் அருகே இன்று பள்ளி மாணவிக்கு திருமணம் நடக்க இருப்பதாவும் அதை தடுத்து நிறுத்துமாறும் அவர் கூறினார்.

இதுகுறித்து விசாரிக்குமாறு ஓமலூர் தாசில்தாருக்கு கலெக்டர் மகரபூசணம் உத்தரவிட்டார்.

வருவாய் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பள்ளிமாணவிக்கு திருமணம் நடப்பது உறுதியானது. சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த மேல்காமாண்டப்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி–செல்வம்மாள் ஆகியோரின் மகன் லட்சுமணன்(25) என்பவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கோபி –ஜமுனா ஆகியோரின் 17 வயது மகளான பள்ளி மாணவிக்கும் இன்று ஓமலூர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது தெரியவந்தது.

இதை அடுத்து ஓமலூர் வருவாய் ஆய்வாளர் ராமராஜன், கிராம நிர்வாக அலுவலர்கள் கீர்த்தி, தங்கராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் மனோன் மணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று திருமண வயதை எட்டாத பெண் குழந்தைக்கு திருமணம் நடத்தக்கூடாது என்று கூறி இரு வீட்டாரிடமும் எழுதி வாங்கிக்கொண்டனர்.

இதனால் இன்று ஓமலூரில் நடக்க இருந்த குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமண நேரத்தில் மாயமான மணமகனின் பெற்றோர் கைது!!
Next post கணவன் குடிப்பழக்கத்தை கைவிடாததால் கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை: அதிர்ச்சியில் கணவரும் தற்கொலை!!