என்னை கருணை கொலை செய்யுங்கள்: சேலம் கலெக்டரிடம் வாலிபர் மனு!!
சேலம் மாவட்டம் மேட்டூர் மாதையன் குட்டை ராஜாஜி நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 24). இவர் இன்று தனது தாயாருடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் வருவாய் அதிகாரி செல்வராஜியிடம் ஒரு மனு கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:–
எனக்கு வயது 24. எனது தந்தை கூலி வேலை செய்து வருகிறார். என் உடன் பிறந்தவர்கள் 2 பெண்கள். அக்கா கவிதாவுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இளைய தங்கை வயது 19– என்ஜினீயரிங் படிப்பு 1 வருடம் முடிந்த நிலையில் எனது நண்பர்கள் ஊர் பண்டிகையின் போது ஆசையாய் பேசி என்னை கொலை செய்யும் முயற்சியில் அடித்ததில் பலத்த காயம் அடைந்த எனக்கு எனது தாய்– தந்தை இருவரும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து முடியாது என்ற பட்சத்தில் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருந்த பணத்தை எல்லாம் அழித்தும், கடன் வாங்கியும் செலவு செய்து நினைவு வரும் போதும் எதுவும் எனது தாய் – தந்தை பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு கொண்டு இருந்தார்கள்.
தினமும் தாய் வேலை செய்தால் சாப்பாட்டிற்கு, தந்தை வேலை செய்தால் மருத்துவ செலவுக்கு என்ற சூழ்நிலை வந்துவிட்டது. அப்போது என்னால் அசையக்கூட முடியாது. எனது தங்கதான் என்னை சுத்தம் செய்வது போன்ற உதவிகளை செய்து வந்தார்.
தாய், தந்தை முடியாமல் அழுவதும், என்னால் தாங்க முடியாவிட்டாலும் அசையா உடல் மருந்து மாத்திரை வாங்க பணம் இல்லாவிட்டாலும் என்னால் உடல் வலி தாங்க முடியவில்லை. தினம் தினம் வலிக்கு நான் எழுந்து நடக்கவோ, அசைய முடிந்தாலோ நான் ஏதேனும் செய்து கொள்ள முடியும். என் தாய், தந்தையிடம் பலமுறை கூறியும் முடியாது என்று கூறிய பிறகே சட்டப்படி நடவடிக்கைக்கு வந்து உள்ளேன்.
அய்யா தாங்கள் மனம் இறங்கி என்னை கருணை கொலை செய்ய வேண்டுமாய் இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு இப்போதைய நிலை மருத்துவமனையில் சென்று பார்க்க முடியவில்லை. எங்கு சென்றாலும் ஆபரேசன் செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பி விடுவதாலும், செலவு செய்ய முடியாத சூழ்நிலையிலும் தயவு செய்து எனக்கு உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
என் மனு ஏற்று என் உடல் வலியில் தினம் துடிப்பதும் என்னை பார்க்க வருபவர்கள் கூட முகம் சுழிக்கும் அளவிற்கு நாற்றம் இருக்கிறது. தற்பொழுது கொடி ராஜாவின் தந்தை பழனிச்சாமி, த/பெ. கந்தசாமி என்பவர் கூட அடிக்கடி அடையாளம் தெரியாத ஆட்களை அழைத்து வந்து எங்கள் வீட்டை காட்டியும், வருகிறார்கள்.
1. கொடிராஜா, 2. சதீஷ், 3. சந்திரன், 4. காவேரி, 5. சிவகுமார், 6. பழனி, 7. வாஞ்சிநாதன், 8. கந்தசாமி, 9. வெங்கடாசலம் ஆகியோர் உயிருடன் இருந்தால் நான் பலமுறை என் தாய், தந்தையிடம் முடிவாக காவல் நிலையம் சென்று புகார் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள்.
ஆனால் எந்த பயனும் இல்லை. சேலம் எஸ்.பி. தான் எங்களுக்கு மனம் இரங்கி உதவினார். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
தற்பொழுது என்னை மீண்டும் கொலை செய்து விட்டால் கூட பரவாயில்லை. இப்போது வலியின் காரணமாகவும் தாங்க முடியாத காரணத்தாலும் என் முழுமனதுடன் சம்மதிக்கிறேன். தயவு செய்து கருணை கொலை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Average Rating