உலக யோகா தினம் கொண்டாடுவதால் உலகம் முழுவதும் யோகா பிரபலம் அடையும்: ஜனாதிபதி பிரணாப் நம்பிக்கை!!

Read Time:1 Minute, 38 Second

fd2b1918-7ac8-47d7-8628-2c5ae3126ad9_S_secvpfஉலக யோகா தினம் கொண்டாடுவதால் இந்திய பாரம்பரியமான யோகா சர்வதேச அளவில் பிரபலம் அடையும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் மகள் நிவேதிதா எழுதியுள்ள யோகா புத்தகத்தை வெளியிட்டு பிரணாப் முகர்ஜி பேசியதாவது:-

யோகா என்பது ஒரு கலை. அது ஒரு அறிவியல் தத்துவம். மனதின் சக்திகளை ஒன்றிணைத்து ஆன்மாவை விழிப்படைய செய்வதற்கான அருமருந்து. யோக பயிற்சிகள் மனஅழுத்தத்தை குறைப்பதாக இன்றைய நவீன மருத்துவ முறைகள்கூட ஒப்புக்கொண்டுள்ளன.

யோகப்பயிற்சிகள் அலைபாயும் மனதை கட்டுப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல் பல வெற்றிகளை சாதிக்க உறுதுணையாகவும் இருக்கிறது. பிரெய்லி முறையில் வெளியிடப்பட்டுள்ள இந்த யோகா புத்தகம் கண் பார்வையற்றவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வரும் 21-ந்தேதி உலக யோகா தினமாக கொண்டாடுவது விலைமதிப்பில்லா இந்திய பாரம்பரியமான யோகாவை சர்வதேச அளவில் பிரபலப்படுத்தும் என நான் நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்டுக்கு ரூ.3ஆயிரம் கோடி இழப்பு: ரெயிலை நிறுத்துவதற்கு இனி சங்கிலியை பிடித்து இழுக்க தடை!!
Next post மிகவும் வேடிக்கையான திருமண வீடியோவிற்கு காரணமான கோபக்கார மாப்பிள்ளையும் வெட்கப்படும் மணப்பெண்ணும்மிகவும் வேடிக்கையான திருமண வீடியோவிற்கு காரணமான கோபக்கார மாப்பிள்ளையும் வெட்கப்படும் மணப்பெண்ணும்!!