ஆண்டுக்கு ரூ.3ஆயிரம் கோடி இழப்பு: ரெயிலை நிறுத்துவதற்கு இனி சங்கிலியை பிடித்து இழுக்க தடை!!

Read Time:3 Minute, 27 Second

da15a78f-fd65-4553-8ef8-243c8184bbbe_S_secvpfரெயில் பயணிகள் அவசர தேவை ஏற்படும் போது, ஓடும் ரெயிலை நிறுத்த சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தும் வசதி நடைமுறையில் உள்ளது. இதற்காக ஒவ்வொரு பெட்டியிலும் ‘‘ரெயிலை நிறுத்த சங்கிலியைப் பிடித்து இழுக்கவும்’’ என்று ரெயில்வே நிர்வாகம் எழுதி வைத்துள்ளது.

சமீப காலமாக சிறு, சிறு விஷயங்களுக்கு எல்லாம் சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தி விடுகிறார்கள். பெரும்பாலும் செல்போன் விழுந்து விட்டதாக கூறி நிறைய இளைஞர்கள் சங்கிலியைப்பிடித்து இழுத்து விடுகிறார்கள்.

இதன் காரணமாக ரெயில்கள் தாமதமாக சென்று சேருகின்றன. இது ரெயில்வே நிர்வாகத்துக்கு கடும் இழப்பை ஏற்படுத்துகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தேவை இல்லாத சங்கிலி இழுப்பால் ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிந்தது.

இதையடுத்து ரெயில் பெட்டிகளில் உள்ள சங்கிலியை அகற்ற ரெயில்வே இலாகா முடிவு செய்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக வடகிழக்கு ரெயில்வே மண்டலத்தில் ரெயில் பெட்டிகளில் உள்ள சங்கிலிகளை அகற்றும் பணி தொடங்கி விட்டது.

இது தவிர நாடெங்கும் உள்ள ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு, ‘‘புதிய பெட்டிகளில் சங்கிலி இழுக்கும் வசதியை செய்ய வேண்டாம்’’ என்று ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பழுது நீக்கும் பிரிவு மற்றும் பராமரிப்பு பிரிவுக்கு வரும் ரெயில் பெட்டிகளில் உள்ள சங்கிலிகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்னும் சில மாதங்களுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து ரெயில்களிலும் சங்கிலிகள் அகற்றப்பட்டு விடும் என்று தெரிய வந்துள்ளது. அதன்பிறகு ஓடும் ரெயிலை நிறுத்த செல்போனை பயன்படுத்தும் மாற்று ஏற்பாட்டை ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி ரெயில் பெட்டிகளில் என்ஜின் டிரைவர் மற்றும் துணை டிரைவரின் செல்போன் எண்கள் அச்சிட்டு ஒட்டப்படும். அவசரத் தேவை ஏற்படும் போது பயணிகள் டிரைவரின் செல்போனில் பேசி ரெயிலை நிறுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வேளை டிரைவர்களின் செல்போனில் பேச சிக்னல் கிடைக்காவிட்டாலோ அல்லது டிரைவர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தாலோ பயணிகள் என்ன செய்வது என்பதற்கு பதில் சொல்லப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்பண்டம் என்று நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 2 வயது குழந்தை பல நாள் சிகிச்சைக்கு பிறகு பலியான சோகம்!!
Next post உலக யோகா தினம் கொண்டாடுவதால் உலகம் முழுவதும் யோகா பிரபலம் அடையும்: ஜனாதிபதி பிரணாப் நம்பிக்கை!!