இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் இனி பேஸ்புக்கைத் தடையின்றிப் பயன்படுத்தலாம்..!!!

Read Time:1 Minute, 54 Second

timthumb (8)இண்டர்நெட் வேகம் குறைவாக இருக்கும் நேரத்திலும் பேஸ்புக்கைத் தடையின்றிப் பயன்படுத்த வசதியாக ‘லைட்’ என்ற அன்ட்ரோய்ட் அப்ஸ் ஐ வெளியிட்டிருக்கிறது பேஸ்புக் நிறுவனம்.

முதற்கட்டமாக ஆசியாவில் மட்டும் வெளியிடப்பட்டுள்ள இந்த அப்ஸ் விரைவில் ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில் வெளியிடப்பட உள்ளது.

இதுபற்றி பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வளர்ந்த நாடுகளிலும் கூட பல்வேறு இடங்களில் நெட்வர்க் வேகமாக இருப்பதில்லை.

இதனால், பேஸ்புக்கின் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.

அதற்குத் தீர்வாக இந்த பேஸ்புக் ‘லைட்’ அப்ஸ் இருக்கும். இந்த அப்ஸ் 1 எம்.பி.க்கும் குறைவான அளவே கொண்டது. இதை எளிதாகத் தரவிறக்கி மொபைல்களில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

மிகக் குறைவான இண்டர்நெட் வேகத்தில் பேஸ்புக்கின் நியூஸ் பீட், ஸ்டேட்டஸ் அப்பேட், போட்டோ மற்றும் நோட்டிபிக்கேஷன்களை எளிதாக எந்தத் தடையுமின்றி பார்க்க முடியும்’ என தெரிவித்துள்ளது.

இந்த அப்ஸை அன்ட்ரோய்ட் மொபைல்களில் மட்டுமே பயன்படுத்த முடியும். பிளே ஸ்டோரில் இருந்து இதனை டவுன்லோட் செய்து கொள்ளலாம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருவண்ணாமலையில் இன்று நடக்க இருந்த இளம்பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்!!
Next post அதை ஆரம்பிச்சது நானல்ல – அனுஷ்கா!!