திருவண்ணாமலையில் இன்று நடக்க இருந்த இளம்பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்!!

Read Time:1 Minute, 38 Second

1f2cd8c3-c110-4570-a825-435508050651_S_secvpfதிருவண்ணாமலை முத்து விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. அவரது மகன் சீனிவாசன். அவருக்கும், திருவள்ளூர் மாவட்டம் பெரிய குளம் கிராமத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அவர்கள் திருமணம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திருவண்ணாமலை செட்டித்தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடக்க இருந்தது. இதற்காக நேற்று இரவே உறவினர்கள் திருமண மண்டபத்திற்கு வந்து விட்டனர். இரவு பெண் அழைப்பு முடிந்து விருந்தும் நடந்தது.

இந்த நிலையில் மணப்பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை என்று கலெக்டருக்கு புகார் சென்றுள்ளது. அதைத்தொடர்ந்து கலெக்டர் அ.ஞானசேகரன் உத்தரவின்பேரில் சமூக நலத்துறை அலுவலர் உமையாள் திருமண மண்டபத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை என்பது தெரிந்தது. அதைத்தொடர்ந்து மணமக்களின் பெற்றோரிடம் பேசி 18 வயது முடிவதற்குள் திருமணம் நடத்தக்கூடாது என்று கூறி எழுதி வாங்கினார். இதனையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை!!
Next post இண்டர்நெட் வேகம் குறைவாக இருந்தாலும் இனி பேஸ்புக்கைத் தடையின்றிப் பயன்படுத்தலாம்..!!!