ராயக்கோட்டை அருகே கள்ளக்காதலால் பெண் கொலை: கைதான கணவர் வாக்குமூலம்!!

Read Time:5 Minute, 35 Second

a75f00a9-44d3-4dfe-90c8-ec41bd494136_S_secvpfகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா உத்தனப்பள்ளி அருகே உள்ளது பீர்ஜேப்பள்ளி. இந்த ஊரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). லாரி டிரைவர். இவரது மனைவி கண்ணம்மாள் (30). இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகிறது. 3 மகன்கள் உள்ளனர்.

சுரேஷ் லாரி ஓட்டுவதற்காக அடிக்கடி வெளியூர் சென்றுவிடுவார். இந்த நிலையில் கண்ணம்மாளுக்கும், அதே ஊரை சேர்ந்த தினேஷ் (35) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் அது கள்ளக்காதலானது. இவர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் ஊர் பொதுமக்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சுரேஷ் அதிர்ச்சி அடைந்தார். அவர் தனது மனைவியை கண்டித்தார். நமக்கு திருமணம் ஆகி குழந்தைகள் வந்துவிட்டார்கள். இந்த நேரத்தில் நீ முறை தவறி நடக்கலமா? என்று தட்டிக்கேட்டார்.

ஆனால் கணவரின் பேச்சை கேட்காத கண்ணம்மாள், கணவர் வேலைக்கு சென்ற உடனே தனது கள்ளக்காதலன் தினேசுடன் உல்லாசமாக வாழ்க்கையை தொடர்ந்து வந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் கொடுவாளால் மனைவி கண்ணம்மாளை சரமாரியாக வெட்டினார். இதில் கண்ணம்மாள் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இந்த கொலை பற்றி தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடாசலம், ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், உத்தனப்பள்ளி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் உதய குமார், ராவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கொலை செய்யப்பட்ட கண்ணம்மாள் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

அவரது கழுத்து பகுதியில் 8–க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக கொடுவாளால் வெட்டப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மனைவியை கொன்றதாக சுரேஷை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து கொலை செய்ய பயன்படுத்திய கொடுவாளும் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான சுரேஷ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:–

நான் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். எனது மனைவிக்கும் தினேஷ் (வயது 35) என்பவருக்கும் இடையே கடந்த 8 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருப்பதாக ஊரார் பேசிக்கொண்டனர். இதனால் எனக்கு அவமானமாக இருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதுதொடர்பாக உத்தனப்பள்ளி போலீசில் புகார் கொடுத்தேன். போலீசார் என் மனைவியையும் தினேஷையும் அழைத்து இனிமேல் ஒழுங்காக வாழ வேண்டும் என கண்டித்து புத்திமதி கூறி அனுப்பி வைத்தனர்.

இதனால் என் மனைவி திருந்திவிட்டாள் என நினைத்து அவளுடன் வாழ்க்கையை தொடர்ந்தேன். நேற்று மதியம் வீட்டிற்கு வந்தேன். அப்போது என் மனைவியும் தினேஷும் உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்தேன். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இனிமேலும் அவளை விட்டு வைத்தால் குடும்பத்திற்கு கெட்டப்பெயர் ஏற்படும் என நினைத்தேன். பின்னர் மதுக்கடைக்கு சென்று 3 பீர் பாட்டில் வாங்கி குடித்தேன். குடி போதையில் வீட்டிற்கு வந்து என் மனைவியை கொடுவாளால் வெட்டினேன். 8 ஆண்டுகளாக அவள் கள்ளக்காதலனுடன் தொடர்பு வைத்திருந்ததால் 8 முறை அவளை வெட்டினேன். இதனால் அவள் இறந்துவிட்டாள். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன். போலீசார் என்னை தேடுவதை அறிந்ததும் கிராம நிர்வாக அதிகாரியிடம் சரண் அடைந்தேன்.

இவ்வாறு அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கைதான சுரேஷ் ஓசூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் பீர்ஜேப்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீஸ்காரரை கைது செய்ய கோரி போலீஸ் நிலையம் முன் பெண் மீண்டும் விஷம் குடித்தார்!!
Next post கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி உள்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனை!!