அமெரிக்காவில் புலிகளுக்கு எதிராக மூன்றாவது வழக்கு

Read Time:5 Minute, 11 Second

நியூயோர்க்கிலிருந்து வெளியாகும் அமெரிக்காவின் பிரபல பத்திரிகையாகிய “ரெலி நியூஸ்” கடந்தவாரம் வெளியிட்டிருந்த செய்திகளில் அண்மையில் புலிகள் இயக்கத்தினர் எட்டுப்பேர் நியூயோர்க் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டது பற்றியும் அவர்கள் மீது நியூயோர்க் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது பற்றியும் வெளியான செய்தி முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. அமெரிக்காவில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் எனக் கருதப்பட்ட புலிகள் இயக்கத்தினர் இயக்கப் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் மீது ஏற்கனவே இரண்டு வழக்குகள் அமெரிக்காவில் தொடரப்பட்டுள்ள நிலையில் தற்போது புலிகள் இயக்கத்துக்கெதிரான மூன்றாவது வழக்கும் நியூயோர்க் நீதிமன்றத்தில் நியூயோர்க் பொலிஸாரால் தொடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி “புலி வழக்கு” என்று மேற்படி “ரெலி நியூஸ்” பத்திரிகை குறிப்பிட்டு செய்தியை வெளியிட்டுள்ளதாகவும் இவ்வாறே கடந்தவாரம் புலிகள் மீது அமெரிக்காவில் மூன்றாவது வழக்குத் தொடரப்பட்ட தகவல் அமெரிக்காவின் ஏனைய செய்திப் பத்திரிகைகளிலும் முக்கிய செய்தியாக வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மேற்படி கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட 8 புலிகள் இயக்கத்தினரும் பிரதிநிதிகளும் அமெரிக்காவின் பல்வேறு பிரதேசங்களிலும் நடமாடி “கிறடிற்காட்” கடன் அட்டைகள், வங்கி அட்டைகளைக் களவாடியுள்ளனர் எனவும் அந்த வங்கி கடன் அட்டைகளைப் பயன்படுத்தி இலட்சக் கணக்கான டொலர் பணத்தொகையைத் திருடியுள்ளனர் எனவும் மேற்படி பத்திரிகை தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மேற்படி நபர்களைத் தேடிப்பிடிப்பதற்காக அமெரிக்க எவ்.பி.ஐ. எனப்படும் அமெரிக்க சமஷ்டி புலனாய்வுப் பிரிவினர் (Federal Bureau of Investigation FBI) தீவிர தேடுதல் மற்றும் புலனாய்வுகளை மேற்கொண்டு மேற்படி எட்டுப் புலிகள் இயக்க நபர்களையும் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் அமெரிக்கப் பத்திரிகைகளில் இவ்வாறு புலிகள் இயக்கத்தினரின் “கிறடிட்” கார்ட் களவு, எவ்.பி.ஐ. அவர்களைக் கைதுசெய்தது, தீவிர விசாரணைகளின் பின்னர் அவர்கள் மீது நியூயோர்க் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது ஆகிய செய்திகள் பிரதான தலைப்புகளில் வெளியிடப்பட்டுள்ளன.

“ரெலி நியூஸ்” பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ள விசேட தகவல்களுக்கேற்ப மேற்படி எட்டுப்புலிகள் இயக்கத்தினரும் களவாடிய கடன் அட்டைகளின் இரகசிய இலக்கங்களைப் பிரயோகித்து அமெரிக்காவில் பல்வேறு நகரங்களிலுமுள்ள வங்கிகளின் ஏ.ரி.எம். (ATM) இயந்திரங்களிலிருந்தும் இலட்சக்கணக்கான டொலர் பணத்தை களவாடியுள்ளதையும் அவற்றின் விபரங்களையும் எவ்.பி.ஐ. புலனாய்வுப்பிரிவினர் கண்டுபிடித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த எட்டுப்பேர் அடங்கிய மேற்படி புலிகள் இயக்க கொள்ளைக் குழுவினருக்குத் தலைவராக இருந்து செயற்பட்டவர் எஸ். வேலாயுதபிள்ளை எனப்படும் 31 வயதான நபர் எனவும் இவரை அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்திலுள்ள “நொவார்க்” (New Jersey Novark International Airport) சர்வதேச விமான நிலையத்தில் வைத்தே எவ்.பி.ஐ. புலனாய்வு பொலிஸார் கைது செய்ததாகவும் மேலும், “ரெலிநியூஸ்” பத்திரிகைத் தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த வேலாயுதபிள்ளை கைதுசெய்யப்பட்ட போது அவர் மேற்படி நொவார்க் விமான நிலையத்தில் ஒரு பணியாளராக வேலை செய்துகொண்டிருந்தார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விமானப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு முன்னர் அந்தப் பகுதிக்கு புலிகள் வந்து சென்றுள்ளனர்
Next post விடுதலைப் புலிகளின் உடல்கள் நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்டமைக்கு இடதுசாரி முன்னணி கடும் கண்டனம்