திண்டிவனம் அருகே 8–ம் வகுப்பு மாணவி திருமணம் தடுத்து நிறுத்தம்!!

Read Time:1 Minute, 35 Second

24cbf0c2-b555-4a62-9c7a-278f06a47f67_S_secvpfதிண்டிவனம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஜெனீபர் (வயது 13). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 8–ம் வகுப்பு மாணவி.

இந்த மாணவிக்கும், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (21) என்ற வாலிபருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. இந்த திருமணம் திண்டிவனம் அருகே மணப்பெண் ஊரில் நாளை நடைபெறுவதாக இருந்தது.

இதுபற்றி சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே மணிமேகலை உள்ளிட்ட சில அதிகாரிகள் ஒலக்கூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மருதப்பனுடன் அந்த கிராமத்துக்கு விரைந்து சென்றனர்.

அந்த மாணவியின் பெற்றோரை சந்தித்தனர். 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று எச்சரித்தனர். மேலும் இந்த திருமணத்தால் அந்த மாணவிக்கு எதிர்காலத்தில் ஏற்படும் உடல்நலக்கேடு பற்றியும் அறிவுரை கூறினர்.

அதன் பேரில் அந்த மாணவியின் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் மணப்பெண்ணின் வீடு களை இழந்தது. கல்யாணத்துக்காக வந்திருந்த உறவினர்கள் சோகத்துடன் வீடு திரும்பினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தங்கம் விலை பவுனுக்கு ரூ.24 குறைந்தது!!
Next post நெல்லையில் சட்டக்கல்லூரி மாணவி கற்பழிப்பு: சக மாணவர் கைது!!