மதுரையில் 120 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் சிக்கினர்!!

Read Time:1 Minute, 41 Second

83b56480-45a9-4d31-afe7-9829100bde69_S_secvpfமதுரை ஒத்தக்கடை 4 வழிச்சாலை வழியாக போதை பொருளை சிலர் காரில் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் 4 வழிச்சாலையில் போலீசார் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வேகமாக ஒரு கார் வந்தது. அதனை தடுத்து நிறுத்திய போது அதிலிருந்த 4 பேர் காரிலிருந்து வேகமாக இறங்கி இருட்டுக்குள் ஓடினர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்தனர்.

அவர்களை அழைத்து வந்து காருக்குள் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 120 கிலோ கஞ்சா காரில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை இலங்கைக்கு கடத்த திட்டமிடப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

பிடிபட்ட 4 பேரும் மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எங்கிருந்து கஞ்சா கொண்டு வரப்படுகிறது? இதனை யார் கடத்துகின்றனர்? என்பது குறித்து போலீசார் பிடிபட்ட 4 பேர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 120 கிலோ கஞ்சா காருடன் பிடிப்பட்டு இருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்திய வில்வித்தை அணிக்கு விசா மறுத்த அமெரிக்கா!!
Next post தங்கம் விலை பவுனுக்கு ரூ.24 குறைந்தது!!