இந்திய வில்வித்தை அணிக்கு விசா மறுத்த அமெரிக்கா!!

Read Time:3 Minute, 15 Second

6070d058-07d8-4b33-a98c-c6aa86f22688_S_secvpfஅமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக இளையோர் வில்வித்தைப் போட்டிக்கு செல்லவிருந்த இந்திய இளையோர் வில்வித்தை அணிக்கு, அமெரிக்க விசா மறுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

31 உறுப்பினர்கள் கொண்ட இந்திய அணியினருக்கு டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.. இதில் 7 வில்வித்தை வீரர்கள், 2 பயிற்சியாளர்கள், இந்திய விளையாட்டுத்துறை ஆணைய அதிகாரி ஆகியோருக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டுள்ளது. கொரிய பயிற்சியாளர் சே வோம் லிம் உட்பட 20 பேருக்கு விசாவை மறுத்துள்ளது புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம்.

ஜூன் 8-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடக்கும் இந்த உலக இளையோர் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க அமெரிக்க வில்வித்தைக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்தன் பேரில், தங்கள் அணியை அனுப்ப இந்திய அரசு, அனுமதி வழங்கிய நிலையில் தற்போது அமெரிக்க தூதரகத்தின் இந்த முடிவினால் போட்டியில் இந்தியா பங்கேற்பது கேள்விக்கிடமாகியுள்ளது.

இதுகுறித்து இந்திய வில்வித்தைக் கூட்டமைப்பின் பொருளாளர் விரேந்தர் சச்தேவா, விசாவுக்கான நேர்காணலில் இந்த 20 பேரின் பதிலால் விசா அதிகாரி அதிருப்தி அடைந்திருக்கலாமென்றும், இவர்கள் வில்வித்தை போட்டி முடிந்து இந்தியா திரும்பாமல், அங்கேயே தங்கி விட வாய்ப்பிருப்பதாக நேர்காணல் செய்த அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கலாமென்றும் கூறினார்.

மேலும், “இந்த முடிவு அதிர்ச்சியளிக்கிறது. பெரும்பாலான வில்வித்தை வீரர்கள், சமூகத்தின் கீழ்நிலையிலிருந்து வருபவர்கள். அசாம், ஜார்க்கண்ட், பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு ஆங்கிலம் சரிவர தெரியாது, இதனால் மற்றவர்களுடன் உரையாடுவதில் இவர்களுக்கு சிக்கல் இருக்கிறது. வாழ்வாதாரத்துக்காக என்ன செய்கிறீர்கள்? என்று விசா வழங்கும் அதிகாரி கேட்ட போது நாங்கள் வில்வித்தை வீரர்கள், வில்வித்தை மட்டுமே விளையாடி வருகிறோம். என்று பதில் கூறியுள்ளனர்.” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருச்சியில் கலெக்டரை கண்டித்து பெண் மேலாளர் தற்கொலை முயற்சி!!
Next post மதுரையில் 120 கிலோ கஞ்சாவுடன் 4 பேர் சிக்கினர்!!