சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைத்து பெண்ணுக்கு தண்டனை வழங்கிய 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்!!

Read Time:1 Minute, 45 Second

ee4fc98f-88a0-45b9-b937-0db56127c4b4_S_secvpfஉத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவரை மணிக்கணக்கில் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைத்து தண்டனை அளித்த 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மீரட் நகரின் கன்கார்கேரா பகுதியில் வங்கி கேஷியர் ஒருவருக்கும், ஜாசு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்குமிடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கேஷியர் காவல்நிலையத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப்பெண்ணை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு அந்தப்பெண்ணை வெயிலில் மணிக்கணக்கில் நிற்க வைத்து மனிதாபிமானமற்ற முறையில் கொடுமைப்படுத்தியதாக அளித்த புகாரின் அடிப்படையில், சீனியர் சப்-இன்ஸ்பெக்டர் பவன் குமார், பெண் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அம்ரிதா யாதவ் மற்றும் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் மேனகா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இதுபற்றி துறைரீதியான விசாரணைக்கு போலீஸ் சூப்பிரெண்டு உத்தரவிட்டுள்ளார். அதிகாரிகள் தவறு செய்தது தெரியவந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விமான கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த ரூ. 60 லட்சம் தங்கம்!!
Next post வங்காளதேச பிரதமருக்கு காமதேனு பசு, கற்பக விருட்சம் பொறிக்கப்பட்ட திரைச்சீலையை பரிசளித்த மோடி!!