விமான கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த ரூ. 60 லட்சம் தங்கம்!!

Read Time:1 Minute, 29 Second

42e1e31f-f7e4-487b-9376-156ffb858177_S_secvpfவெளிநாடுகளில் இருந்து கள்ளத்தனமாக தங்கத்தை கடத்தி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சுங்கத் துறையினர் சோதனை கெடுபிடிகளை அதிகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், துபாயில் இருந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூருக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஏராளமான தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு நேற்றிரவு ரகசிய தகவல் வந்தது. இதையொட்டி, மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியபோது அந்த விமானத்துக்குள் நுழைந்த சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த விமானத்தின் வால்பகுதியில் உள்ள கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த 22 தங்கக்கட்டிகளை அதிகாரிகள் கைப்பற்றினர். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் உள்நாட்டு சந்தை மதிப்பு சுமார் 60 லட்சம் ரூபாய் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிவகங்கையில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர் உள்பட 3 பேர் கைது!!
Next post சுட்டெரிக்கும் வெயிலில் நிற்க வைத்து பெண்ணுக்கு தண்டனை வழங்கிய 3 போலீஸ்காரர்கள் சஸ்பெண்ட்!!