திருப்பூரில் மாற்றுத்திறனாளி இளம்பெண் கற்பழிப்பு: கட்டிடத்தொழிலாளிக்கு அரிவாள்மனை வெட்டு!!

Read Time:2 Minute, 28 Second

931621fc-6a54-4387-963c-4cf52c0b5ca1_S_secvpfதிருப்பூர் கொங்கு மெயின் ரோடு வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சந்தானம் (வயது 50). கட்டிடத்தொழிலாளி. சந்தானம் கடந்த சில நாட்களாக பக்கத்து தெருவில் கட்டி வரும் கட்டிடத்தில் வேலை செய்து வருகிறார்.

கட்டிடத்தின் அருகே உள்ள வீட்டில் 23 வயது மதிக்கத்தக்க மாற்றுத்திறனாளி பெண் வசித்து வருகிறார். அந்த பெண்ணை சந்தானம் பல நாட்களாக நோட்டமிட்டார்.

நேற்று மாற்றுத்திறனாளி பெண்ணின் தந்தை வேலைக்கு சென்று விட்டார். தாய் மதியம் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய சந்தானம் இளம்பெண்ணின் வீட்டுக்குள் புகுந்தார்.

கால் நடக்க முடியாத நிலையிலும் சந்தானத்தை தடுத்து நிறுத்தினார். காமம் தலைக்கேறிய சந்தானம் மாற்றுத்திறனாளி பெண்ணின் வாயில் துணியை வைத்து திணித்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளி கற்பழித்தார். ஆத்திரமடைந்த இளம்பெண் அருகில் இருந்த அரிவாள்மனையை எடுத்து சந்தானத்தின் தலையில் வெட்டினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அப்போது கடைக்கு சென்ற தாய் வீட்டுக்கு வந்தார். மகளின் அலங்கோலத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். அவரும் அருகில் கிடந்த கட்டையை எடுத்து சந்தானத்தை கடுமையாக தாக்கினார்.

பலத்த காயம் அடைந்த சந்தானம் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தப்பி ஓடினார். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் சந்தானத்தை கைது செய்தனர்.

பலத்த காயம் அடைந்த அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுவனின் கண்ணில் வளர்ந்த புழு: உயிரோடு அகற்றிய மருத்துவர்கள் (வீடியோ இணைப்பு)!!
Next post மறைமலைநகர் பகுதியில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கும்பல் கைது!!