திருப்பூர் மாவட்டத்தில் 40 ஆயிரத்து 799 தனிநபர் இல்ல கழிப்பறைகள் கட்ட அனுமதி: கலெக்டர் தகவல்!!

Read Time:3 Minute, 43 Second

cc60361c-f52f-498e-ad9e-ed8c4bbbbb09_S_secvpfதிருப்பூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 2015–16 ஆம் ஆண்டுக்கு தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 15,458 கழிப்பறைகளும், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் 25,341 கழிப்பறைகளும் என மொத்தம் 40,779 கழிப்பறைகள் கட்டுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

தனிநபர் இல்ல கழிப்பறைகளை முழுமையாக கட்டி முடிப்பதற்கு 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கினை முழுமையாக நிறைவு செய்ய அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் ஒதுக்கீடு செய்து நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 265 ஊராட்சிகளிலும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம அளவிலான வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் புதுவாழ்வு திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் கிராம அளவிலான சங்கங்களுக்கும் ரூபாய் 10 ஆயிரம் வீதம் இந்த மாவட்டத்தில் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் சம்பந்தப்பட்ட சங்கங்களின் வங்கி கணக்கில் வரவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.

ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள், கிராம அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் சமூக வல்லுனர்கள் மூலமாக தனிநபர் இல்ல கழிப்பிடம் அமைக்கும் பணிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதுவரையிலும் 3 ஆயிரத்து 169 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 2 ஆயிரத்து 670 பயனாளிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர்களால் வேலை உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.

வேலை உத்தரவு வழங்கப்பட்டதில் 1,165 பயனாளிகளுக்கு இட அளவீடு செய்து பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் இம்மாத இறுதிக்குள் முழுமையான பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று ஊராட்சி மன்ற தலைவர்களால் வேலை உத்தரவு வழங்கப்பட்டு வேலைகளை தொடங்க உரிய நடவடிக்கை எடுக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன.

திருப்பூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் சுகாதாரத்தை மேம்படுத்திடவும் இந்த திட்டத்தில் தனிநபர் கழிப்பிடம் இதுவரை கட்டாத பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தனிநபர் கழிப்பிடங்களை அமைக்க விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எனக்கு கல்யாணமே வேண்டாம் போங்கடா? மாப்பிள்ளையை கடுப்பேற்றிய மணமகள்- காமெடி கல்யாண வீடியோ!!
Next post சிறுவனின் கண்ணில் வளர்ந்த புழு: உயிரோடு அகற்றிய மருத்துவர்கள் (வீடியோ இணைப்பு)!!