திருச்சி மலைக்கோட்டையில் திருமணமான ஒரு மாதத்தில் பட்டதாரி பெண் மர்மச்சாவு: போலீசார் விசாரணை!!

Read Time:3 Minute, 38 Second

415cec17-0818-4e58-9b54-a2f85c8fa9e1_S_secvpfமகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர் மதுக்கர். இவர் திருச்சி பெரியகடை வீதியில் துலாபார கடை (நகையை துல்லியமாக எடை போடும் நிலையம்) நடத்தி வருகிறார். இவருடைய மகள் தனஸ்ரீ (வயது 26). எம்.பி.ஏ. பட்டதாரி. இவரது அத்தை மகன் பிரசாத் (24). 10–ம் வகுப்பு வரை படித்துள்ள இவரும் துலாபார கடை நடத்தி வருகிறார்.

தனஸ்ரீக்கும், பிரசாத்துக்கும் கடந்த மாதம் 6–ந்தேதி மகாராஷ்டிராவில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசாத் மட்டும் திருச்சிக்கு வந்தார். இதை தொடர்ந்து நேற்று காலை தனஸ்ரீ மற்றும் அவரது குடும்பத்தினர் திருச்சிக்கு வந்துள்ளனர். பின்னர் பெரிய கடை வீதியில் வெள்ளை வெற்றிலைக்கார தெருவில் உள்ள பிரசாத் வீட்டிற்கு தனஸ்ரீ சென்றார்.

இந்த நிலையில் நேற்று இரவு தனஸ்ரீயின் பெற்றோருக்கு போன் செய்த பிரசாத்தின் குடும்பத்தினர், தனஸ்ரீ தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த தனஸ்ரீயின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அங்கு அலறியடித்தபடி ஓடினர். அப்போது தனஸ்ரீ உடலில் மேல்பகுதியில் மட்டும் தீயில் எரிந்த படி இறந்து கிடந்தார்.

இதில் சந்தேகம் அடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற துணை கமிஷனர் சரோஜ்குமார் தாக்கூர் மற்றும் கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பிரசாத்தின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனஸ்ரீ சமையலறையில் வைத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.

ஆனால் போலீசார் சமையலறைக்குள் சென்று பார்த்த போது தீக்குளித்து தற்கொலை செய்ததற்கான தடயங்கள் ஏதும் இல்லை. மேலும் அவர் விழுந்து கிடந்த இடத்திற்கு ஓடி வந்ததற்கான எந்த அடையாளங்களும் இல்லை.

இதை தொடர்ந்து அருகில் உள்ள வீட்டினரிடம் போலீசார் விசாரித்த போது பெண்ணின் அலறல் சத்தம் உள்பட எந்தவித சத்தமும் வெளியில் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர். தலை, மார்பு உள்பட சில இடங்களில் மட்டும் லேசான தீக்காயங்கள் மட்டுமே உள்ளதால் போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்துள்ளது.

இதையடுத்து கொலை செய்து விட்டு தீக்குளித்து தற்கொலை செய்ததாக நாடகமாடுகிறார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். திருமணமான ஒரு மாதத்திற்குள் இளம்பெண் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓட்டப்பிடாரம் அருகே உருட்டு கட்டையால் தாக்கி விவசாயி கொலை: சொத்து தகராறில் மகன் வெறிச்செயல்!!
Next post வாழப்பாடியில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: 7 பேர் கைது!!