கும்பகோணம் அருகே கணவன் –மனைவி தற்கொலை!!

Read Time:1 Minute, 34 Second

464d7317-eb53-4b50-9113-84513d425e7c_S_secvpfகும்பகோணம் அருகே உள்ள வலையப்பேட்டை மாங்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் காமராஜ் (54) கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தா (45). இவர்களுக்கு விஜய குமார் என்ற மகன் உள்ளார். அவர் காட்டு மன்னார் கோவிலில் உள்ள ஸ்டூடியோவில் வேலை பார்த்து வருகிறார்.

கணவன்– மனைவிக்கிடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்றும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதனால் வேதனை அடைந்த சாந்தா வீட்டின் அருகே தங்களுக்கு சொந்தமான வாழை தோப்பில் விஷம் குடித்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

அங்குள்ள மோட்டார் கொட்டகையில் காமராஜ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் ஊருக்கு வந்து இருந்த காமராஜ் மகன் விஜயகுமார் தாய்– தந்தை இருவரும் தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் கும்பகோணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புதுக்கோட்டையில் பட்டப்பகலில் மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை!!
Next post ஓட்டப்பிடாரம் அருகே உருட்டு கட்டையால் தாக்கி விவசாயி கொலை: சொத்து தகராறில் மகன் வெறிச்செயல்!!