ஆன்லைன் மூலம் பிரபல நிறுவனம் பெயரில் போலி சட்டை விற்பனை: சிட்லபாக்கத்தில் 2 பேர் கைது!!

Read Time:1 Minute, 55 Second

88dd15d4-907d-4856-ac4a-0401bffb984f_S_secvpfபிரபல நிறுவனத்தின் பெயரில் உள்ள ‘டி சர்ட்’, சட்டைகள் குறைந்த விலையில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக இணையதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நிறுவனத்தின் மும்பை அதிகாரிகள் தனஜோ, யூசப் ஆகியோர் பல்லாவரம் போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் விசாரணை செய்த போது திண்டுக்கல்லை சேர்ந்த எட்வின்சன், வத்தலகுண்டை சேர்ந்த தினேஷ்குமார் ஆகியோர் பிரபல நிறுவனங்களின் பெயரில் சாதாரண ‘டி சர்ட்’ சட்டைகளை குறைந்த விலையில் விற்பனை செய்து வந்தது தெரிந்தது.

சிட்லபாக்கம், லட்சுமி நகரில் தங்கி இருந்த அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பிரபல நிறுவனத்தின் பெயரில் விற்பனைக்காக வைத்திருந்த 350 சட்டைகள், டி சர்ட் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்கள் போலீசில் கூறும் போது, பஞ்சாப்பில் குறைந்த விலைக்கு சாதாரண சட்டைகளை வாங்கி வந்து ஆன்லைன் மூலம் பிரபல நிறுவனத்தின் பெயரில் விற்று வந்தோம் என்று கூறி உள்ளனர். அவர்களிடம் ஏராளமானோர் ஆன்லைன் மூலம் சட்டைகள் வாங்கி ஏமாந்து இருப்பது தெரிய வந்தது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இதனால் ஆன்லைனில் பொருட்கள் வாங்குபவர்கள் அதன் தரம் குறித்து கலக்கம் அடைந்து உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஈரோடு அருகே ஆற்று சுழலில் சிக்கி பலியான வாலிபர் உடல் மீட்பு!!
Next post புதுக்கோட்டையில் பட்டப்பகலில் மூதாட்டியை கொன்று நகைகள் கொள்ளை!!