சூர்யா வேண்டாம் – மறுக்கும் நடிகை..!!

Read Time:2 Minute, 46 Second

suriya-1மாசு படத்தைத் தொடர்ந்து விக்ரம்குமார் இயக்கத்தில் ’24′ என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. அந்தப்படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு மும்பையில் நடந்துமுடிந்தது. சூர்யாவுக்கு 36 வயதினிலே, மாசு ஆகிய படங்களின் வெளியீட்டு வேலைகள் இருந்ததால் அவற்றை முடித்துவிட்டு அடுத்த கட்டப்படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தனராம்.

அதன்படி ஜூன் 1 முதல் அடுத்தகட்டப் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. திட்டமிட்டபடி படப்பிடிப்பைத் தொடங்க எல்லா வேலைகளும் தயார் என்றாலும் படத்தில் நடிக்கவேண்டிய அம்மா நடிகை தேதி தராமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பு ஒன்றாம்தேதி தொடங்கினாலும் ஐந்தாம் தேதியிலிருந்து அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்வதாகச் சொல்லியிருந்தாராம்.

ஆனால் இப்போது ஐந்தாம் தேதியை உறுதிப்படுத்துவதற்காக அவரிடம் பேசினால், அந்தத் தேதிகளை வேறொரு படத்துக்குக் கொடுத்துவிட்டதாகச் சொன்னாராம். அதிர்ச்சியடைந்த படக்குழுவினர், குறிப்பிட்ட தேதிகளை ’24’ படத்துக்காக அவர் கொடுத்திருப்பதாகச் சொன்ன தகவல்களை நினைவுபடுத்தியிருக்கின்றனராம். ஆனால் நடிகை, நான் அந்தப்படத்துக்குப் போகவேண்டும் என்று உறுதியாகச் சொல்லுகிறார் என்பதால் சூர்யா படக்குழுவினர் படபடப்பாக இருக்கின்றனராம்.

அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன என்பதால் அதற்குள் இந்தப்படப்பிடிப்புக்கு வருவதற்கான சம்மதத்தைப் பெற்றுவிடலாம் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறார்களாம். எவ்வளவோ படங்களில் நடித்தும் இதுபோன்றதொரு சிக்கல் வராத அந்த நடிகை இப்போது இப்படியொரு சிக்கல் செய்வது எதனால்? என்று தெரியாமல் படக்குழுவினர் தடுமாறிக் கொண்டிருக்கிறார்களாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10 கோடி நிதி மோசடி – காதலனுடன் நடிகை கைது!!
Next post நட்பு நாயகன் விருது தனுஷ்க்கு…!!