இந்தியா முழுவதும்: ஒரே நாளில் 67 பேருக்கு ஆயுள் தண்டனை

Read Time:2 Minute, 4 Second

இந்தியா முழுவதும் 5 பெரிய நகர கோர்ட்டுகளில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5 வெவ்வேறு வழக்குகளில் 67 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் மந்திரி, உயர் போலீஸ் அதிகாரி, பிரபல வக்கீல், இயக்கத் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் அடங்குவர். 2003-ம் ஆண்டு உ.பி.யில் பெண் கவிஞர் மதுமிதா சுக்லாவை கொன்ற வழக்கில் மாநில முன்னாள் மந்திரியும், சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.வுமான அமர்மாணி திரிபாதி, அவரது மனைவி மதுமாணி மற்றும் இருவருக்கு ஆயுள் தண்டனையை லக்னோ கோர்ட்டு வழங்கியது. 2005-ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் அர்த்தனாரி என்னும் விவசாயி கொல்லப்பட்ட வழக்கில் நேற்று சேலம் நகர கூடுதல் செசன்சு கோர்ட்டு 3 பெண்கள் உள்பட 7 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்தது. டெல்லியில் 1997-ம் ஆண்டு போலீசார் நடத்திய போலி என்கவுண்ட்டர் வழக்கில் நேற்று உதவி போலீஸ் கமிஷனர் ராத்தி உள்பட 10 போலீசார் ஆயுள் தண்டனை பெற்றனர். 1992-ம் ஆண்டு, பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின் உ.பி.யில் நடந்த இனக்கலவரத்தில் 9 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பிரபல வக்கீல் புஷ்பேந்திர யாதவ் உள்பட 15 பேருக்கு ஆயுள் தண்டனையை கான்பூர் கோர்ட்டு வழங்கியது. 1998-ம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பு வழக்கில் அல்-உம்மா இயக்கத் தலைவர் பாஷா, பொதுச் செயலாளர் அன்சாரி உள்பட நேற்று ஆயுள்தண்டனை அறிவிக்கப்பட்டோர் 31 பேர் ஆவர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெனாசிர் ஊர்வலத்தில் குண்டு வெடிப்பு: 20 பேரிடம் துருவித் துருவி விசாரணை
Next post 21 வயதுக்குட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்ற வியாபாரிகள் கைது