சேவை வரி உயர்வு எதிரொலி: நாளை முதல் மொபைல், ஓட்டல் மற்றும் பயண கட்டணங்கள் அதிகரிக்கிறது!!

Read Time:1 Minute, 34 Second

93a7fd2a-0165-4aae-98d3-80dacb572ef9_S_secvpfமத்திய அரசின் பட்ஜெட்டில் சேவை வரி 12.36 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜேட்லி அறிவித்திருந்தார். இவ்வரி உயர்வு நாளை முதல் அமல்படுத்தப்படுவதால், மொபைல், ஓட்டல் மற்றும் பயண கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ரெயில் போக்குவரத்து, விமான போக்குவரத்து, வங்கி, காப்பீடு, விளம்பரம், கட்டுமானம், கிரெடிட் கார்டு, நிகழ்வு மேலாண்மை மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் இனி அதிக சேவை கட்டணத்தை வாடிக்கையாளர்கள் செலுத்தவேண்டும். தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதற்கான குறுந்தகவல்களை ஏற்கனவே வங்கிகள் மற்றும் மொபைல் சந்தாதாரர்களுக்கு அனுப்ப ஆரம்பித்துவிட்டது.

அதே போல் ரெயில்களில் முதல் வகுப்பு மற்றும் ஏசி பெட்டியில் பயணம் செய்பவர்கள், சரக்கு பரிமாற்றம் செய்பவர்கள் 0.5 சதவீத அளவுக்கு அதிக கட்டணங்களை செலுத்தவேண்டும்.

ரெயில் டிக்கெட்டுகளில் தற்போது 3.7 சதவீதமாக உள்ள சேவை வரி, நாளை முதல் 4.2 சதவீதமாக அதிகரிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனவளர்ச்சி குன்றிய 32 வயது மகனை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட தந்தை: ஒடிசாவில் பரிதாபம்!!
Next post 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் வெயிலினால் அதிகம் பேர் இறப்பு!!