கிறிஸ்தவ ஆலய மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: சென்னை பெண் என்ஜினீயர் கணவருடன் கைது!!

Read Time:5 Minute, 23 Second

ba13b0d5-4deb-464e-956a-4a2031b47d12_S_secvpfநெல்லை புதிய பஸ் நிலையம் அருகே சேவியர் காலனியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இந்த கிறிஸ்தவ ஆலயம் 3 தளங்களுடன் கூடிய கட்டிடமாக ரூ.2 கோடி செலவில் கட்டப்பட்டு வந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆலயத்தின் புதிய கட்டுமான மேற்கூரை காங்கிரீட் அமைக்கும் பணி நடந்தது.

அப்போது திடீரென்று காங்கிரீட் மேற்கூரை சரிந்து கீழே விழுந்தது. இதில் நாகர்கோவிலை சேர்ந்த எடிசன், ஜஸ்டின், மற்றொரு ஜஸ்டின் ஆகிய 3 தொழிலாளிகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தனர். மேலும் 13 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடந்தன. ஆனாலும் இடிபாடுகள் முழுமையாக அப்புறப்படுத்தப்படவில்லை. சம்பவம் நடந்த அன்று கான்கிரீட் செட் ஆகாமல் இருந்தது. இதனால் எளிதாக இடிபாடுகள் அகற்றப்பட்டன.

தற்போது கான்கிரீட் இறுகி செட் ஆனதால் அதை உடைக்க எந்திரம் வரவழைக்கப்பட்டு பணிகள் நடந்தன. இந்த பணியில் நெல்லை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், பாளையங்கோட்டை தீயணைப்பு படை வீரர்கள் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக மேலப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலாளர்களுக்கான ஒப்பந்ததாரர் சேவியர் காலனியை சேர்ந்த ஜோஸ் (வயது 32) என்பவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில், என்ஜினீயர்கள் எபனேசர், மைக்கேல், பங்கு தந்தை ஜான் செல்லையா, நிர்வாகிகள் டேனியல், மனோகர் உள்பட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த கட்டிட வடிவமைப்பை சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர் புரூசா மற்றும் அவரது கணவர் என்ஜினீயர் கின்ஸ்லி சாமுவேல் ஆகியோர் இணைந்து செய்துள்ளனர். அவர்களையும் போலீசார் தேடி வந்தனர். அவர்கள் சென்னையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சென்னை சென்று 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே மேற்கூரை காங்கிரீட் இடிந்து விழுந்த பகுதியில் கட்டிடத்தின் கீழ் தளம் அப்படியே உள்ளது. ஆனால் இடிபாடுகளின் பாரம் தாங்காமல் கீழ்தளத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. காங்கிரீட் தளத்தின் பெரும்பகுதி அகற்ற முடியாமல் அப்படியே இருப்பதால் கீழ்தளம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கட்டிடத்தின் அருகில் பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

கட்டிடத்தின் முன்னே இதுபற்றி போர்டு வைக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே இடிந்து விழுந்த கிறிஸ்தவ ஆலயத்தை மீண்டும் கட்டுவதற்கும், புதுப்பிக்கவும் நெல்லை மாநகராட்சி தடை விதித்து உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் லட்சுமி கூறுகையில், மேற்கூரை சரிந்து விழுந்த ஆலயத்தை தொடர்ந்து கட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்படுகிறது. அங்கு ஆலயத்தை மீண்டும் கட்ட வேண்டுமானால் நகர திட்ட குழுமம் மற்றும் மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து மீண்டும் அனுமதி பெற வேண்டும்’’ என்றார்.

கிறிஸ்தவ ஆலயம் இடிந்தது தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் கருணாகரன் உத்தரவுப்படி, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை உதவி கலெக்டர் பெர்மி வித்யா, பாளையங்கோட்டை தாசில்தார் இந்திரா காந்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விபத்துக்கு காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த குழு அளிக்கும் அறிக்கையின்படி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆந்திராவில் ஐம்பொன் சிலையை திருடிய கல்லூரி மாணவர்கள் 11 பேர் கைது!!
Next post புகை பிடிப்பதை தவிர்ப்பது எப்படி? புதிய ஆன்டிராய்டு அப்ளிகேஷன் சென்னையில் அறிமுகம்!!