போரூரில் பெண்ணை கொலை செய்து நகை கொள்ளை: வட மாநில வாலிபர்கள் கைவரிசையா?
சென்னை போரூர் லட்சுமிநகர் விரிவாக்கம் 3–வது மெயின் ரோடு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தவர் குளோரி (60). திருமணம் ஆகவில்லை. நேற்று காலை குளோரி, அவரது உறவினர் பெண் சரளா (40) ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது, தண்ணீர் சுத்திகரிக்கு எந்திரம் விற்க வந்ததாக கூறிய சில வாலிபர்கள் வீட்டில் இருந்த சரளாவை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டனர். அவரது வாயில் பிளாஸ்திரி போட்டு ஓடடினார்கள். அப்போது தூக்கிக் கொண்டிருந்த குளோரி சத்தம் கேட்டு எழுந்தார். அவரது கை கால்களை கட்டி வாயில் டேப் வைத்து ஒட்டமுயன்றனர். அப்போது அவர் கூச்சல் போட்டதால் கழுத்தை நெறித்தனர்.
பின்னர் வாயை டேப் போட்டு ஒட்டி விட்டு அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்தனர். வீட்டில் இருந்த 3 பீரோக்களையும் திறந்து அதில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி ஓடிவிட்டார்கள். இதில் குளோரி மூச்சு திணறி இறந்தார்.
தகவல் அறிந்ததும் போரூர் போலீசார் கொள்ளை நடந்த இடத்துக்கு சென்று விசாரித்தனர். கொள்ளையர்களின் கை ரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை குறித்து விசாரிக்க போரூர் போலீஸ் உதவி கமிஷனர் குழந்தை வேலு தலைமையில் போரூர் இன்ஸ்பெக்டர் சார்லஸ், மாங்காடு இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், மதியழகன், குன்றத்துர் இன்ஸ்பெக்டர் சம்பத் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சென்னை புறநகர், திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட பல்வேறு இடங்களுக்கு சென்று கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தேடுதல் வேட்டையும் நடைபெறுகிறது.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் 25 முதல் 30 வயது இருக்கும் வடமாநில வாலிபர்கள் போல இருந்தனர். தமிழை அரை குறையாக பேசினார்கள். எனவே, குளோரியை கொலை செய்துவிட்டு தப்பியவர்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
ஒரு மாதத்துக்கு முன்பும், வேறு ஒரு பகுதியில் இது போல் பெண் ஒருவரை கட்டிப்போட்டு விட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இவர்களும் அதே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
கைரேகையை கொண்டு பழைய குற்றவாளிகளின் கைவரிசையா என்றும் விசாரணை நடந்து வருகிறது.
இறந்த குளோரியின் தந்தை ரெயில்வே ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர். குளோரி திருமணம் செய்து கொள்ளாததால் அவருக்கு சொத்து எதுவும் இருந்து இருக்கலாம். அதற்கான பத்திரங்களை எடுத்துச் செல்வதற்காக யாரும் வந்தார்களா? குளோரி மீது யாருக்காவது முன் விரோதம் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating