ஓடும் ரெயிலிலிருந்து கணவன் வெளியே தள்ளியதால் தண்டவாளத்தில் குழந்தை பெற்ற மனைவி!!

Read Time:1 Minute, 57 Second

a751cbf8-4687-499a-96ce-0bf0d7793f40_S_secvpfஒடிசா மாநிலத்தில் ஓடும் ரெயிலிலிருந்து கர்ப்பிணி மனைவியை கணவன் தள்ளி விட்டதால் அந்தப் பெண் தண்டவாளத்திலேயே குழந்தையை பிரசவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோராபுட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று அந்தப்பெண் தனது கணவர் சூரஜ் கெர்கடாவுடன் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கணவன் ரெயிலில் இருந்த வெறொரு பெண்ணிடம் நெருக்கமாக பேசிக் கொண்டிருந்ததைக் கண்ட அவர் அதை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த சூரஜ் விடியற்காலை 4 மணியளவில் தூங்கிக் கொண்டிருந்த அந்த நிறைமாத கர்ப்பிணியை எழுப்பி ரெயில் பெட்டியின் கதவுக்கருகே கூட்டி வந்து, அந்தப் பெண் எதிர்பார்க்காத நேரத்தில் அவரை ரெயிலிலிருந்து தள்ளி விட்டுள்ளார்.

ரெயில் அப்போதுதான் ரவுலி ஸ்டேஷனைக் கடந்திருந்தது. கீழே விழுந்த அதிர்ச்சியிலேயே அந்த கர்ப்பிணிப் பெண் ரெயில்வே தண்டவாளத்தில் வைத்தே தன் வயிற்றில் இருந்த குழந்தையை பிரசவித்தார். பின்னர் ரெயில்வே போலீசார் சுயநினைவற்ற நிலையில் இருந்த அந்தப் பெண்ணை கண்டெடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள சூரஜை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 82 வயது முதியவரின் முதுகுத்தண்டில் 14 ஸ்க்ரூக்களை பொருத்தும் அரிய வகை ஆபரேஷனை செய்த மருத்துவர்கள்!!
Next post தாமதமாக வேலைக்கு வந்த 17 விமான பணிப்பெண்கள் அதிரடி சஸ்பெண்டு!!