கேட்ஜெட் மோகத்தால் தன் உடலையே விற்கத் துணிந்த 13 வயது சிறுமி!!

Read Time:2 Minute, 57 Second

f2e5adfb-9880-4ea6-8fb8-ff3dcf9ad6f4_S_secvpfஆண்ட்ராய்ட் போன்களுடன் இணைத்து உபயோகிக்கப்படும் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல அதி நவீன கேட்ஜெட் கருவிகளை வாங்குவதில் இளம் தலைமுறையினரிடையே பெரும் ஆர்வம் உண்டு. ஆனால் இந்த கேட்ஜெட் சாதனங்களை வாங்க வேண்டும் என்பதற்காக 13 வயது சிறுமி விபச்சாரியாக மாறிய சம்பவம் அவளது தாய் மற்றும் அவளுக்கு கவுன்சிலிங் கொடுப்பவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் வதோதரா நகரின் சுபன்புரா பகுதியில் மரக்கன்றுகள் விற்கும் கடை வைத்திருக்கும் பெண் ஒருவர், சில தினங்களுக்கு முன் தனது 13 வயது மகள் வாந்தியெடுத்ததை பார்த்து பதட்டமடைந்தார். தான் கர்ப்பமடைந்திருப்பதாக அவரது மகள் சொன்னதும் அவர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.

பின் அந்த சிறுமியிடம் கர்ப்பத்திற்கான காரணம் குறித்து விசாரித்த போது, கடந்த ஒரு வருடமாக பல ஆண்களுடன் அவள் விபச்சாரத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது. இதற்காகவே ரகசியமாக ஒரு மொபைல் போனை வைத்திருந்த அந்த சிறுமி, நேரடியாக வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டு, தனது தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் தனது வீட்டில் வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். தான் செய்வது தவறான காரியம் என்பது கூட அந்த சிறுமிக்கு புரியவில்லை.

பின்னர் அவருக்கு ‘அபயம்’ என்ற அமைப்பு மூலம் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது. அந்த சிறுமியின் தந்தை இறந்து 3 வருடங்கள் ஆன நிலையில், அவளது தாய் எவ்வளவு சிரமப்பட்டு அவளை வளர்க்கிறார் என்பதை கவுன்சிலிங் கொடுத்தவர்கள் அவருக்கு புரிய வைத்தனர். பின்னர் எதற்காக இப்படி செய்தாய் என்று கேட்ட போது கேட்ஜெட் கருவிகள் வாங்குவதற்கு பணம் தேவைப்பட்டது அதனால் தான் இப்படி செய்ததாக கூறிய சிறுமியின் பதில் கவுன்சிலிங் கொடுத்தவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது அறையில் நடந்த பரிசோதனையில் பல விலையுயர்ந்த கேட்ஜெட்கள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 6 வயது சிறுமியின் 2 சிறுநீரகங்களும் திருடப்பட்ட அவலம்: எய்ம்ஸ் மருத்துவமனை மீது தந்தை புகார்!!
Next post மும்பை கடற்படை அதிகாரி மீது பெண் கற்பழிப்பு புகார்!!