6 வயது சிறுமியின் 2 சிறுநீரகங்களும் திருடப்பட்ட அவலம்: எய்ம்ஸ் மருத்துவமனை மீது தந்தை புகார்!!

Read Time:3 Minute, 25 Second

80e9676e-788d-4550-bed7-3e281421bce2_S_secvpfடெல்லியில் உள்ள புகழ்பெற்ற எய்ம்ஸ் (AIIMS-அகில இந்திய மருத்துவ அறிவியல் மையம்) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமியின் 2 சிறுநீரகம் திருடப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த சிறுமியின் தந்தை பவன் குமார், எய்ம்ஸ் மருத்துமனை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார். ஆனால் அவர்கள் மழுப்பலான பதில் கூறவே ஹவுஸ் காஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், எய்ம்ஸ் மருத்துவமனையில் எனது மகளுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின் போது அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகத்தை திருடியுள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் பழச்சாறு கடை வைத்திருக்கும் பவன்குமார் தனது 6 வயது மகளுக்கு கிட்னியில் ஏற்பட்ட கோளாறுக்கு சிகிச்சை செய்வதற்காக கடந்த ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார். இங்கு அளித்த சிகிச்சையில் சிறுமி படிப்படியாக தேறினார்.

இந்நிலையில் கடந்த மார்ச் 13-ம் தேதி சிறுமிக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது. இரு தினங்களுக்குப்பின் சிறுமிக்கு மீண்டும் வலி ஏற்படவே அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்துபார்த்த போது சிறுமிக்கு 2 கிட்னியும் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே கிட்னி திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததென்றும், இது தொடர்பாக மருத்துவர்களிடம் விசாரித்த போது முறையான பதில் எதையும் தெரிவிக்காததால் சந்தேகம் வலுத்ததாகவும் பவன் குமார் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் பேரில் மூத்த மருத்துவ பேராசிரியர் தலைமையில் விசாரணை நடத்த கமிட்டி ஒன்றை எய்ம்ஸ் நிர்வாகம் அமைத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி எய்ம்ஸ் அளித்த முதல் அறிக்கையில் சிறுமியின் கிட்னி சிறப்பாக இருப்பதாகவே கூறப்பட்டிருந்தது. எனவே மார்ச் மாதம் நடந்த அறுவை சிகிச்சையின் போதுதான் கிட்னி திருடு போயுள்ளதாக கருதப்படுகிறது. மார்ச் மாதத்திலிருந்தே டயாலிசிஸ் இயந்திரம் மூலம்தான் சிறுமியின் ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. இனி அவருக்கு மாற்று சிறுநீரகம் பொருத்துவது மட்டுமே ஒரே வழி என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளி இறகுகளுடன் இரவு நேரத்தில் வானத்தில் ஜோடியாக பறக்கும் மனித உருவங்கள்: நெல்லூரில் பரபரப்பு!!
Next post கேட்ஜெட் மோகத்தால் தன் உடலையே விற்கத் துணிந்த 13 வயது சிறுமி!!