வெள்ளி இறகுகளுடன் இரவு நேரத்தில் வானத்தில் ஜோடியாக பறக்கும் மனித உருவங்கள்: நெல்லூரில் பரபரப்பு!!

Read Time:2 Minute, 25 Second

a5cfe306-9cad-436b-a42f-b2f4d8d3e9c0_S_secvpfஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் புறநகரில் சந்திரபாபு காலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.

இங்கு கடந்த 1 வாரமாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை மனித வடிவில் வித்தியாசமான உருவங்கள் ஜோடி ஜோடியாக வானத்தில் பறப்பதாக தகவல் பரவியுள்ளது.

இந்த உருவங்களுக்கு கைகளுக்கு பதில் 2 இறக்கைகள் வெள்ளி போல வெண்மை நிறத்தில் காணப்படுகின்றன. கால்கள் மனிதர்களுக்கு இருப்பது போல நீளமாக உள்ளன.

இந்த உருவங்கள் பூமியை நோக்கி பறந்து வருவதாகவும் பின்னர் வானத்துக்கு சென்று விடுவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். சில உருவங்கள் வீட்டு கூரை மீது நின்றபடி கீச்… கீச்… குரலில் பேசிக் கொள்வதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.

இந்த பகுதி மக்கள் வெயில் காலத்தில் காற்றுக்காக வீட்டுக்கு வெளியேபடுத்து தூங்குவது வழக்கம். மனித உருவங்கள் பறப்பதாக தகவல் வந்தவுடன் யாரும் வெளியே படுப்பது இல்லை. இரவு 7 மணிக்கே வீட்டு ஜன்னல், கதவுகளை மூடிக் கொள்கிறார்கள். சிலர் ஜன்னலை மட்டும் திறந்து அந்த உருவங்களை பார்க்கிறார்கள்.

அந்த உருவங்கள் முதலில் கொக்கு அல்லது நாரையாக இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டது. அது மனித உருவில் இருப்பதால் பேயாக இருக்கலாம் என்றும், தேவதைகளாக இருக்கலாம் என்றும் பொது மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இவர்கள் வேற்று கிரகத்தை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். இந்த உருவத்தால் நெல்லூர் பகுதியில் இரவு நேரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரதமரானால் என்ன செய்வீர்கள்? அரத பழசான கேள்விக்கு அசத்தல் பதில் சொல்லும் அல்ட்ரா குட்டீஸ் வீடியோ!!
Next post 6 வயது சிறுமியின் 2 சிறுநீரகங்களும் திருடப்பட்ட அவலம்: எய்ம்ஸ் மருத்துவமனை மீது தந்தை புகார்!!