நாய்களை கடத்திய நடிகருக்கு 10 ஆண்டு சிறை..!!

Read Time:1 Minute, 59 Second

johnnydeppஅமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆலிவுட் நடிகர் ஜானி டேப் (51). இந்த மாத தொடக்கத்தில் அவர் அவுஸ்திரேலியாவுக்கு சென்றார். விமானத்தில் சென்ற போது தன்னுடன் 2 நாய்கள் மற்றும் துப்பாக்கி போன்றவற்றை எடுத்து சென்றார். ஆனால் அவற்றை விமான அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் தெரியாமல் மறைமுகமாக கடத்திச் சென்றார்.

அவர் அவுஸ்திரேலியா சென்றபிறகு அவற்றின் போட்டோக்கள் பத்திரிகையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நடிகர் ஜானி டேப் கொண்டு வந்த 2 நாய்க்குட்டிகளும் சட்ட விரோதமாக அமெரிக்காவில் இருந்து கடத்தி வரப்பட்டவை என அரசு தெரிவித்தது.

அதன்மூலம் ‘ரேபிஸ்’ எனப்படும் வெறிநாய்கடி நோய் பரவும் அபாயம் உருவாகும். எனவே 50 மணி நேரத்துக்குள் அந்த நாய்கள் ஆஸ்திரேலியபாவில் இருந்து வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே சட்ட விரோதமாக நாய்களை கடத்தி வந்த நடிகர் ஜானி டேப்பின் செயலுக்கு ஆஸ்திரேலியா ‘செனட்’ சபை கண்டனம் தெரிவித்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதில் தண்டனை நிருபிக்கப்பட்டால் நடிகர் ஜானி டேப்புக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை அல்லது ரூ.1 கோடியே 75 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டியதிருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பேப்பரில் செல்போன்…!!
Next post பிரதமரானால் என்ன செய்வீர்கள்? அரத பழசான கேள்விக்கு அசத்தல் பதில் சொல்லும் அல்ட்ரா குட்டீஸ் வீடியோ!!