நடிகை குயிலி மீதான வழக்கு ஒத்தி வைப்பு…!!

Read Time:1 Minute, 29 Second

kuyili2கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாகை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட கோபாலுக்கு ஆதரவாக நடிகை குயிலி திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகில் கடந்த மார்ச் மாதம் 25–ந்தேதி பிரசாரம் செய்தார்.

ஆனால் அவர் புதிய பஸ் நிலையம் அருகில் மட்டும் அனுமதி பெற்று விட்டு நகரம் முழுவதும் பிரசாரம் செய்தது தேர்தல் விதிமுறை மீறல் என்று தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜன் திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக நடிகை குயிலி, வீடு கட்டும் சங்க தலைவர் வக்கீல் அன்பரசன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நடிகை குயிலி உள்பட 2 பேரும் ஆஜராகாததால் வழக்கை ஜூலை 6–ந்தேதிக்கு நீதிபதி சிவா ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்றோருக்காக திருமணத்துக்கு YES சொன்ன அனுஷ்கா!!
Next post இறந்தவர் 1 மணி நேரத்தில் மீண்டும் உயிருடன் எழுந்தார்…!!