பெற்றோருக்காக திருமணத்துக்கு YES சொன்ன அனுஷ்கா!!

Read Time:1 Minute, 58 Second

Anushakaஅனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தெலுங்கு இணைய தளங்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டு உள்ளன.

அனுஷ்காவுக்கு 33 வயது ஆகிறது. 2005–ல் சினிமாவில் நடிக்க வந்தார். பத்து வருடங்களாக தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ள ‘ருத்ரமாதேவி’, ‘பாகுபலி’ ஆகிய இரு சரித்திர படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.

அனுஷ்காவுக்கு திருமணத்தை முடிக்க கடந்த இரு வருடங்களாக பெற்றோர் முயற்சித்து வந்தனர். ஆனால், திருமணத்துக்கு சம்மதம் சொல்லாமல் தள்ளிப் போட்டு வந்தார். நிறைய மாப்பிள்ளைகள் பார்த்தும் யாரையும் தேர்வு செய்யவில்லை. இதனால் குடும்பத்தினர் வருத்தத்தில் இருந்தனர்.

அவர்கள் தொடர் நிர்ப்பந்தத்தால் தற்போது அனுஷ்காவிடம் மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. திருமணத்துக்கு சம்மதம் சொல்லி விட்டாராம். இதனால் குடும்பத்தினர் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. ஏற்கெனவே பார்த்த மாப்பிள்ளைகளில் ஒருவரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விரைவில் அனுஷ்காவுக்கு திருமணம் நடக்க உள்ளது. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க முடிவு செய்துள்ளார். நடிப்பதற்கு தடை போடாத மாப்பிள்ளைக்கே தலையை நீட்டுவாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாதவரத்தில் தொழில் அதிபர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை!!
Next post நடிகை குயிலி மீதான வழக்கு ஒத்தி வைப்பு…!!