பெண்களின் பாதுகாப்புக்காக டெல்லி பஸ்களில் பெண் பாதுகாவலர்கள்: முதல் கட்டமாக 2500 பேருக்கு பயிற்சி!!

Read Time:1 Minute, 31 Second

225573bf-b3ef-4dc7-96ca-3059b7febabb_S_secvpfடெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க பஸ்களில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பெண் பாதுகாவலர்கள் (மார்ஷல்ஸ்) நியமிக்கப்பட உள்ளனர். இந்த தகவலை டெல்லி மாநில போக்குவரத்துறை மந்திரி கோபால் ராய் கூறினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இதற்காக அரசு முதல் கட்டமாக 2 ஆயிரத்து 500 பெண்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறினார். அவர்கள் குழுக்களாக பிரிந்து பஸ்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள், ஒரு குழுவில் 3 முதல் 4 பாதுகாவலர்கள் இருப்பார்கள் என்றும் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்ள வசதியாக வாக்கி-டாக்கி வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் அனைத்து அரசு பஸ்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு உள்ளதாகவும், முதல் கட்டமாக 200 அரசு பஸ்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரூ. 21 லட்சம் கள்ள நோட்டுகளுடன் எல்லை பாதுகாப்பு வீரர் கைது!!
Next post கோவையில் விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம்: கைதான நில அளவை அதிகாரி வீட்டில் போலீசார் சோதனை!!