மாஜிஸ்திரேட்டு கல்லால் அடித்து கொலை

Read Time:2 Minute, 24 Second

மாஜிஸ்திரேட்டு ஒருவர் காரை அகதிகள் முகாம் மீது மோதியதால், ஆத்திரம் அடைந்த அகதிகள் கல்லால் அடித்து கொன்றனர். பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு பாபுவா நிïகினியா. இந்த நாட்டின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பீ. இந்த நகரில் உள்ள கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டாக இருப்பவர் ஐவோ கப்போ. இவர் நேற்று கோர்ட்டில் வேலையை முடித்துவிட்டு, ஓட்டலுக்கு சென்றார். இரவு அவர் அங்கு இருந்து காரில் வீட்டுக்கு புறப்பட்டார். காரை அவரே ஓட்டிச்சென்றார். நிகினியாவின் மேற்கு பகுதி இந்தோனேஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் அகதிகளாக போர்ட் மோர்ஸ்பீ நகரில் குடியேறி உள்ளனர். அவர்களுக்காக அகதிகள் முகாம் உள்ளது. அந்த முகாம் வழியாக மாஜிஸ்திரேட்டு கார் வந்தபோது, அது கட்டுப்பாடு இழந்தது. இதனால் அது அருகில் உள்ள அகதிகள் முகாம் மீது மோதியது. இதில் யாரும் காயம் அடையவில்லை. இந்த விபத்து நடந்ததும், காரை விட்டு இறங்கிய மாஜிஸ்திரேட்டு காருக்கு சேதம் ஏதும் ஏற்பட்டு இருக்கிறதா என்று பார்த்தார். இதை பார்த்த அகதிகள் ஆத்திரம் அடைந்து கல் வீசி மாஜிஸ்திரேட்டை தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த மாஜிஸ்திரேட்டு அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார். பாபுவா நிïகினியா நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடிஇன மக்கள் ஆவார்கள். அவர்களுக்குள் போர் நடப்பது வழக்கம். காடுகளிலும், மலைக்கிராமங்களிலும் அவர்கள் இன்றும் வசித்து வருகிறார்கள். பழிக்குப்பழி வாங்குவதும், மாய மந்திர வேலைகளில் ஈடுபடுவதும் வாடிக்கையான ஒன்று ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மசாஜ் கிளப் போர்வையில் நடிகை வீட்டில் அழகிகள் விபசாரம்: டாக்டர் கைது- 2 பெண்கள் மீட்பு
Next post நடிகர் சிரஞ்சீவி மகள் ஐதராபாத் திரும்புகிறார்- கணவர் வீட்டில் வசிக்கப் போவதாக அறிவிப்பு